ராஜாசரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜாசரஸ்
புதைப்படிவ காலம்: Late Cretaceous
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு ஊர்வன
வரிசை: Saurischia
துணைவரிசை: Theropoda
குடும்பம்: Abelisauridae
துணைக்குடும்பம்: Carnotaurinae
பேரினம்: ராஜாசரஸ்(Rajasaurus)
இருசொற்பெயர்
ராஜாசரஸ் நர்மதென்ஸிஸ் (Rajasaurus narmadensis)
வில்சன் et al., 2003

ராஜாசரஸ் என்பது ஒரு புலால் உண்ணும் டைனோசர் ஆகும். இது முதன் முதலில் சிக்காகோ தொல்லுயிர் அறிஞர்களான பால் செரீனோ, ஜெஃப் வில்சன் மற்றும் இந்திய நிலவியல் கழகம்(Geological Suvery of India) தொல்லுயிர் அறிஞர் சுரேஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் 2003-ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டது. இந்த டைனோசர் இனத்தில் புதைபடிவமாக்கப்பட்ட எலும்புகள் சுரேஷ் ஸ்ரீவஸ்தாவால் 1982-1984இல் குஜராத்தில் உள்ள கேதா மாவட்டத்தின் ராஹியோலி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே போன்ற புதைபடிவங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரு இடங்களின் தூரத்தை கணக்கில் கொண்டு இந்த ராஜாசரஸ் டைனோசர் குஜராத்தில் நர்மதா நதிவரை பரவியிருந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

ராஜாசரஸ்.

ராஜாசாரஸ் நர்மதென்ஸிஸ் என்ற பெயருக்கு நர்மதாவின் ராஜ டைனோசர் என்று பொருள். இந்த டைனோசர் இந்திய துணைக்கண்டம் ஆசியப் பெருநிலபரப்புடன் மோதுவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த இந்திய நிலப்பரப்பில் இருந்திருக்கிறது.

வேளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாசரஸ்&oldid=1349080" இருந்து மீள்விக்கப்பட்டது