ராஜம்மாள் பி. தேவதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ் (7 ஏப்ரல் 1919 - 17 மார்ச் 2002) இந்திய ஊட்டச்சத்து நிபுணர், கல்வியாளர், மற்றும் அவினாசிலிங்கம் இன்ஸ்டிடுயுட் ஃபார் ஹோம் சயின்ஸ் அன்ட் ஹையர் எடுகேஷன் ஃபார் விமனின் (அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) முன்னாள் துணை வேந்தர். இவர் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு மற்றும் பெண்களுக்கான குழுவின் உறுப்பினர். உலக உணவு மாநாட்டின் (World Food Conference) துணைத் தலைவராகவும் இருந்தவர்.[1] 1992 இல் இந்திய அரசாங்கம் இவருக்குப் பத்ம ஸ்ரீ விருதைத் 1992 இல் வழங்கியது.[2]

வாழ்க்கை[தொகு]

7 ஏப்ரல் 1919 இல் முத்தையா பாக்கியநாதன் மற்றும் சொர்ணம்மாளுக்கு ராஜம்மாள் பாக்கியநாதன் மகளாகப் பிறந்தார். பிறந்த இடம், கள்ளிக்குளம், நெல்லை மாவட்டம், தமிழ்நாடு.

கல்வி[தொகு]

குயின் மேரிஸ் கல்லூரி, சென்னையில் 1944 இல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் 1948 இல் அறிவியலிலும், 1949 இல் கலையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். 1950 அவட ஒஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி[தொகு]

பின் அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து துணை வேந்தராகப் பணி புரிந்தார். 1988 - 1994 வரை கல்லூரியின் வேந்தராகவும், பின் நிர்வாக அறங்காவலராக 1994 முதல் 17 மார்ச் 2002 இல் தன் இறப்பு வரை பணிபுரிந்தார்.

ஊட்டச்சத்து மற்றும் கல்வியியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியுள்ளார்.[3][4][5] டி. எஸ். அவினாசிலிங்கம் செட்டியார் பற்றிய நுாலை எழுதியுள்ளார்.[6] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தேசிய ராணுவப் படையின் கெளரவப் படைத்தலைவராகவும் இருந்தார். காந்திகிராம கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம் (Gandhigram Institute of Rural Health and Family Planning), நேஷனல் லிட்ரஸி மிஷன்(National Literacy Mission), சிக்மா சை (Sigma Xi), சிக்மா டெல்டா எப்ஸிலான் (Sigma Delta epsilon), ஒமைக்ரான் நு (Omicron Nu) மற்றும் பை உப்ஸிலான் ஒமைகிரான் (Phi Upsilon Omicron) ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் (Nutrition Society of India) தலைவராக 1987 - 1991 வரை இருந்தார்.[7]

விருதுகள்[தொகு]

ராஜம்மாள் எட்வார்ட் தேவதாஸை மணந்து கொண்டார். இவர் முனைவர் பட்டம் பெற்றவர்.

விருதுகள்[தொகு]

1992 இல் இந்திய அரசாங்கம் இவருக்குப் பத்ம ஸ்ரீ விருதைத் 1992 இல் வழங்கியது.[2] ஜன்மலால் பஜாஜ் விருதை 1988 இல் பெற்றார்.[8]

குறிப்புகள்[தொகு]

  1. "Chancellors". Avinashilingam Institute for Home Science and Higher Education for Women. 2015. Archived from the original on October 2, 2011. Retrieved October 17, 2015
  2. 2.0 2.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Retrieved July 21, 2015
  3. Rajammal Packiyanathan Devadas (1949). "Analyses of South Indian Food Preparations". Ind Jour Med Res. 37 (1): 19–28.
  4. "Rajammal P. Devadas 1919-2002". WorldCat. 2015. Retrieved October 17, 2015.
  5. "Library of Congress profile". Library of Congress. 2015. Retrieved October 17, 2015.
  6. Rajammal P Devadas (1993). Ayya Dr. T.S. Avinashilingam : saga of dedicated life and service. Avinashilingam Education Trust. p. 352. OCLC 35222909.
  7. "Nutrition Society of India presidents". Nutrition Society of India. 2015. Retrieved October 17, 2015
  8. "Dr. Smt. Rajammal P. Devadas". Jamnalal Bajaj Foundation. 2015. Retrieved December 5, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜம்மாள்_பி._தேவதாஸ்&oldid=2701081" இருந்து மீள்விக்கப்பட்டது