ராஜன் கொரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கே. ராஜன் (K. Rajan, பிறப்பு: 19 சனவரி 1981) மலேசியக் கால்பந்து வீரர் ஆவார்.

இவர் நெகிரி செம்பிலான் என்ற மாநிலத்தில் பிறந்தார். இவர் மலேசியாவின்  சங்கக் கால்பந்து சங்கத்தைச் சார்ந்தவர். தற்பொழுது எஃப்.ஏ.எம். கூட்டமைப்பின் ஒரு பிரிவான என். ஒன்பது. எஃப்.சி அமைப்பில் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.

சரவாக் கால்பந்துக் கழகத்தின் முன்னாள் உறுப்பினரான இவர்,[1] மலேசியா லீக் அணிகளில் வேறு பல அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.

இவர் மலேசியாவின் தேசிய கால்பந்தாட்ட அணியிலும் விளையாடி உள்ளார்.

ஒருங்கிணைந்த மலாக்கா[தொகு]

2013 நவம்பர் ,13ஆம் நாள்  மலேசியாவின்  எஃப்.ஏ.எம். கூட்டமைப்பின் சார்பாக ஒருங்கிணைந்த மலாக்காவுடனான் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தார். 2014 மார்ச் 23ஆம் நாள் ஒருங்கிணைந்த மலாக்கா அணிக்காக விளையாடி தன்னுடைய முதல் இலக்கினை அடைந்தார்,  ஒருங்கிணைந்த மலாக்கா அணியின் சார்பாக கோலாலம்பூர் கால்பந்துச் சங்கத்திற்கு எதிராக விளையாடினார். இவரது அணி 3:1 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜன்_கொரான்&oldid=2375391" இருந்து மீள்விக்கப்பட்டது