உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜசேகரன் குணசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜசேகரன் குணசேகரன்
Rajasekaran Gunnasekaran
நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்
செரி தஞ்சோங் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஆகத்து 2023
முன்னையவர்ரவி முனுசாமி
பாக்காத்தான்பிகேஆர்
பெரும்பான்மை3,996 (2023)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Rajasekaran a/l Gunnasekaran

18 ஏப்ரல் 1981
போர்டிக்சன், நெகிரி செம்பிலான்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி பிகேஆர் (PKR)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் (PH)
முன்னாள் மாணவர்கிரிமியா அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்[1]
பணிஅரசியல்வாதி; மருத்துவர்
இணையத்தளம்Rajasekaran Gunnasekaran

டத்தோ ராஜசேகரன் குணசேகரன் (ஆங்கிலம்; மலாய்: Rajasekaran Gunnasekaran) (பிறப்பு: 18 ஏப்ரல் 1981) என்பவர் மலேசிய அரசியல்வாதி; மருத்துவர் ஆவார். இவர் ஆகத்து 2023-ஆம் ஆண்டு முதல் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில், செரி தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பணிபுரிந்தவர்.

இவர் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சியான பிகேஆர் (PKR) கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் செரி தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் 3,996 வாக்குகள் பெரும்பான்மையில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தமது தொகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இவர் போர்டிக்சன் நகரில் ஒரு சேவை மையத்தை உருவாக்கி மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.[2]

செரி தஞ்சோங் சட்டமன்றத் தொகுதி

[தொகு]

செரி தஞ்சோங் சட்டமன்றத் தொகுதி என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், போர்டிக்சன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[3] சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

2018-ஆம் ஆண்டில் இருந்து செரி தஞ்சோங் சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது ராஜசேகரன் குணசேகரன் (Rajasekaran Gunnasekaran) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்[4][5][6][7]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2023 N33 செரி தஞ்சோங் ராஜசேகரன்
குணசேகரன்
(பிகேஆர்)
8,239 66.01% சபிடி அரிபின் (பெர்சத்து) 4,243 34.99% 12,599 3,996 64.84%

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr. Rajasekaran Gunnasekaran". qualitashealth.com.my.
  2. "Rajasekaran Gunnasekaran". Parti Keadilan Rakyat. Retrieved 15 February 2026.
  3. "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan".
  4. "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018. Percentage figures based on total turnout.
  5. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். Retrieved 4 February 2017. Percentage figures based on total turnout.
  6. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.
  7. "The Star Online GE15 Negeri Sembilan". The Star (Malaysia). https://election.thestar.com.my/negerisembilan.html. பார்த்த நாள்: 13 January 2024. Percentage figures based on total turnout.
  8. "Tunku Kecil Muda Dahului 532 Penerima Darjah Kebesaran, Bintang Dan Pingat Negeri Sembilan" (in ms). Bernama. 14 January 2026. https://www.bernama.com/bm/news.php?id=2512166.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜசேகரன்_குணசேகரன்&oldid=4469827" இலிருந்து மீள்விக்கப்பட்டது