ராஜகோபால சுவாமி கோயில், பாளையங்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூலவர்:வேதநாராயண பெருமாள்

உற்சவர்:அழகிய மன்னர் ராஜகோபாலன்

அம்மன்:ஸ்ரீதேவி, பூதேவி, பாமா, ருக்மணி, வேதவள்ளி,குமுதவள்ளி

ஸ்தலவிருட்சம்: செண்பக மரம்

ஆகமம்/பூஜை: வைகானச ஆகமம்

வயது : 500-1000

வரலாற்று பெயர்: திருமங்கைநகார், செண்பகராண்யம், பிரம்ம விருத்தபுரம்

பெருநகரம்: பாளையங்கோட்டை

மாவட்டம்: திருநெல்வேலி

மாநிலம் : தமிழ்நாடு

மங்களாசாசனம்: நாங்குநேரி ஜியார் சுவாமிகள்

விழா: பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் (மார்ச், ஏப்ரல்)

    புரட்டடாசி சனிக்கிழைமகளில் கருட சேவை (செப்டம்பர், அக்டோபர்)
    வைகுண்ட ஏகாதேசி (டிசம்பர், ஜனவரி)

சிறப்புகள்: தமிழ் கட்டடக்கலை மற்றும் மதுரா கிருஷ்ணர் கோவில் வடிவமைப்புகளின் கலவையாகும்.

திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை

முகவரி: ஸ்ரீமன்னர் ராஜகோபாலசுவாமி கோவில்

     பாளையங்கோட்டை
     திருநெல்வேலி மாவட்டம்
     தொலைபேசி: 914622574949

பொதுவான செய்திகள்: செண்பகவிநாயகா், ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரம், 12 புகழ்பெற்ற ஆழ்வார்கள், பரமபதநாதர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்கள் இக்கோவிலில் அருள் பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை: திருமண பேச்சு வார்த்தைகளில் தடைகைள அகற்றுவதற்காகவும், குழந்தைவரம் கேட்டும், கல்வியின் முன்னேற்றத்திற்காகவும் பிரார்த்தனை செய்கின்றனர்

நன்றி செலுத்துதல்: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரங்களை வழங்கியும் நன்றி செலுத்துகின்றனர்

==கோவிலின் பெருமை==: ஒரு விஷ்ணு பக்தர் கோவில் பட்டராக இருந்தார். அவரது மனைவி பெண் குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றெடுத்தாள். தனக்கு பின்னால் பகவானுக்கு சேவை செய்ய தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார். ஆனால் அந்த பிரசவத்திலும் பெண் குழந்தையே பிறந்தது. அவரது பிரார்த்தனை நிறைவேறாததால் கோபமடைந்த பட்டர் ஆரத்தி தட்டை பகவான் மீது வீசி எறிந்தார். இது பகவானுக்கு மூக்கில் ஒரு சிறிய காயத்தை ஏற்படுத்தியது. அவர் வீட்டிற்கு திரும்பிய போது பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறியது கண்டு பயத்தால் நடுங்கினார் பட்டர். கோவிலுக்குத் திரும்பி பகவானின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டார். கோபாலசுவாமி தனது மனைவிகளான பாமா ருக்மணியுடன் பட்டருக்கு காட்சி அளித்ததால் அழகிய மன்னார் என பாரட்டப்பட்டார். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் வேத நாராயண பெருமாள் கருவறையில் இருந்து அருள் பாலிக்கிறாா். உள் மண்டபத்தில் தாயார் வேதவள்ளி மற்றும் குமுதவள்ளியுடன் பகவான் அருள் பாலிக்கிறார். கோபுரத்தில் அழகிய மன்னனார் ராஜகோபால சுவாமி அம்மையார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அருள் பாலிக்கிறார்.

கோவில் வரலாறு[தொகு]

தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு பிசாசுகள் நிறைய பிரச்சைனகளைக் கொடுத்து வந்தன. அர்ஜூனன் இந்திரனின் இராஜ்ஜியத்திற்கு சென்றபோது, இந்திரன் சமுத்திரத்திற்கு நடுவில் அமைந்துள்ள தோயமபுரத்தில் 3 கோடி அரக்கர்கள் உள்ளதாகவும் , அரக்கர்கள் தேவர்களை துன்புறுத்துவதாகவும், அரக்கர்களைக் கொன்று தன்னையும், தேவா்களையும் அந்த பயத்திலிருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அர்ஜூனன் தீவுக்குச் சென்று அரக்கர்களை போருக்கு வருமாறு சவால் விடுத்தார். அரக்கர்களை கொல்வது என்பது எளிமையான காரியம் அல்ல. அரக்கர்களைக் கொல்ல, கொல்ல மீண்டும் உயி்ர்ப்பித்து வரும். அந்த நேரத்தில் ஒரு அசாரிரீ அர்ஜூனனிடம், "அந்த அரக்கார்கள் அவனை ஏளனம் செய்தால்தான் அவற்றை வெல்ல முடியும்" என்று கூறியது.அர்ஜூனன் அரக்கர்களுக்கு பயந்து பின்வாங்குவது போல பாசாங்கு செய்தான். அரக்கர்கள் அர்ஜூனன ஏளனம் செய்தன. உடனடியாக அர்ஜூனன் சிவனால் அளிக்கப்பட்ட பாசுபத ஆயுதத்தால் அரக்கர்களை ஒட்டுமொத்தமாக அழித்தான்.

  இதனால் மனமகிழ்ந்த இந்திரன் தான் வழிபட்ட கோபாலசுவாமி சிலைைய அர்ஜூனனுக்கு பரிசாக அளித்தான். சில நாட்கள் கழித்து பகவான் கண்ணன் அர்ஜூனன் கனவில் தோன்றி அந்த சிலையை கங்கையில் விடுமாறு சொன்னதை அர்ஜூனன் செய்தான். பாண்டிய மன்னர் ஸ்ரீ பளதி கங்கையில் குளிக்கும்போது அந்த சிலையை கண்டெடுத்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து கோவிலைக் கட்டி அச்சிலைக்கு அழகிய ராஜகோபாலன் என பெயரிட்டார்.