ராஜகுமாரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகுமாரி தேவி
Kisan Chachi during a Media Interview
பிறப்புமுசாபர்பூர், பிகார், இந்தியா
மற்ற பெயர்கள்கிசான் சாச்சி
கல்விபத்தாம் வகுப்பு
பணிவிவசாயி
விருதுகள்பத்மஸ்ரீ, கிசான் ஸ்ரீ

ராஜ்குமாரி தேவி ஒரு இந்திய விவசாயி ஆவார். 2019இல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1] கிசான் சாச்சி என்று பிரபலமாக அழைக்கப்படும் ராஜ்குமாரி தேவி, ஒரு ஏழை பிஹாரி குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி உயிரியல் விவசாயத்தின் உதவியுடன் பல ஏழைக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இவரது பணியை அங்கீகரித்து கிசான் ஸ்ரீ விருதை வழங்கினார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சரையா பிளாக்கில் உள்ள ஆனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிசான் சாச்சி என்னும் ராஜ்குமாரி தேவி. [3] திருமணத்திற்குப் பிறகே பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பை இவர் முடித்தார். தற்போது அவர் அவர் கிசான் சாச்சி என்ற குறியீட்டின் உரிமையாளர் ஆவார். [4]

விருதுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Padma Awards ,Government of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2019.
  2. "Chachi takes pickles online". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
  3. "अचार बेचने बाजार जाने पर समाज से बाहर हुईं, अब प्रोडक्ट विदेश जाते हैं". Dainik Bhaskar (in இந்தி). 2019-01-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
  4. "Success Story: Rajkumari Devi AKA Kisaan Chachi". StartoCure (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
  5. "बिहार: 'किसान चाची' ने लिखी नारी शक्ति की नई कहानी, संघर्ष भरा रहा खेती से पद्मश्री का सफर". Zee Bihar Jharkhand. 2020-02-03. பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகுமாரி_தேவி&oldid=3666721" இலிருந்து மீள்விக்கப்பட்டது