ராச்மோகினி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராச்மோகினி தேவி
Rajmohini Devi
பிறப்புகுரோகோரி இந்தியா, சத்தீசுகர், கோண்டுவானா.
இறப்புஇந்தியா, சத்தீசுகர், கோண்டுவானா.
பணிசமூக சேவை
அறியப்படுவது பாபு தர்ம சபா ஆதிவாசி சேவா மண்டலம்
விருதுகள்பத்மசிறீ

ராச்மோகினி தேவி (Rajmohini Devi) ஒரு இந்திய சமூக தொழிலாளி மற்றும் காந்தியவாதி ஆவார். . இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் கோண்ட்வானா பழங்குடி மக்களின் நலனுக்காக "பாபு தர்ம சபா ஆதிவாசி சேவா மண்டலம்" என்ற ஒரு அரசு சாரா அமைப்பை இவர் நிறுவினார் [1]. 1951 ஆம் ஆண்டு பஞ்சத்தின்போது மகாத்மா காந்தி மற்றும் அவருடைய கொள்கைகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையை இவர் கொண்டிருந்தார் [2]. பெண்கள் விடுதலைக்காகப் போராடும் ராச்மோகினி இயக்கம் என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினார்[3]. பழங்குடி மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதும் குடிப்பழக்கத்தை நிறுத்துவதும் கூட இவ்வியக்கத்தின் கொள்கைகளாயின[4]. பழங்குடி மக்கள் மத்தியில். இந்த இயக்கம் படிப்படியாக 80,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட ஒரு வழிபாட்டு இயக்கம் என்ற நிலையை அடைந்த்து. பின்னர் "பாபு தர்ம சபை ஆதிவாசி சேவா மண்டலம்" என்ற பெயரில் ஒரு அரசு சாரா அமைப்பாக மாற்றப்பட்டது[2]. சத்தீசுகர், பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பல ஆசிரமங்களுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது.

1989 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் நான்காவது உயர்ந்த குடியரசு விருதான பத்மசிறீ விருதை தேவிக்கு வழங்கியது[5]. சீமார் கிண்டால் எழுதிய "சமாயிக் கிராந்தி கி அக்ராதூத் ராச்மோகினி தேவி என்ற புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் 2013 ஆம் ஆண்டில் சத்தீசுகர் மாநில இந்தி கிராந்த் அகாடமியால் வெளியிடப்பட்டது[1]. ராச்மோகினி தேவி விவசாய மற்றும் ஆராய்ச்சி நிலையக கல்லூரி, இந்திரா காந்தி வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது [6]. மற்றும் அம்பிகாபூரில் உள்ள அரசு பெண்கள் கல்லூரிக்கும் , ராச்மோகினி தேவி முதுநிலை பெண்கள் கல்லூரி என்று இவர் பெயரிடப்பட்டுள்ளது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "CM Releases Book on Padmashree Rajmohini Devi". Daily Pioneer. 2 May 2013. http://www.dailypioneer.com/state-editions/raipur/cm-releases-book-on-padmashri-rajmohini-devi.html. பார்த்த நாள்: September 2, 2015. 
  2. 2.0 2.1 Stephen Fuchs. "Messianic Movements in Primitive India". NIRC. https://nirc.nanzan-u.ac.jp/nfile/801. 
  3. K N Dash (2004). Invitation to Social and Cultural Anthropology. Atlantic Publishers. பக். 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126903238. https://books.google.ae/books?id=Szt48jbyr9EC&pg=PA369&lpg=PA369&dq=Rajmohini+Devi&source=bl&ots=puC5zkEDCF&sig=jT8j5nF7cCVqnC0YqNR2_syCD0U&hl=en&sa=X&ved=0CEAQ6AEwBmoVChMIptf-wNvYxwIVTS_bCh0aMQvC#v=onepage&q=Rajmohini%20Devi&f=false. 
  4. Virginius Xaxa (2008). State, Society, and Tribes: Issues in Post-colonial India. Pearson Education India. பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131721223. https://books.google.ae/books?id=HfEvLYEIwP0C&pg=PA122&lpg=PA122&dq=Rajmohini+Devi&source=bl&ots=3G5P78B7c_&sig=lo8aKVByZkgtYgmnORfauJgTrZE&hl=en&sa=X&ved=0CE0Q6AEwCWoVChMIptf-wNvYxwIVTS_bCh0aMQvC#v=onepage&q=Rajmohini%20Devi&f=false. 
  5. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: July 21, 2015. 
  6. "Raj Mohini Devi College of Agriculture and Research Station". Indira Gandhi Agricultural University. 2015 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 8, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150808044354/http://igau.edu.in/RMDCarsAmbikapur.htm. பார்த்த நாள்: September 2, 2015. 
  7. "Rajmohini Devi PG Girls College". Rajmohini Devi PG Girls College. 2015 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 17, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160117065301/http://rmdgirlspgcollege.in/about_us.php. பார்த்த நாள்: September 2, 2015. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராச்மோகினி_தேவி&oldid=3569526" இருந்து மீள்விக்கப்பட்டது