ராசையா ராஜசிங்கம்
ராசையா ராஜசிங்கம் Rasiah Rajasingam | |
|---|---|
ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 1974–1978 | |
| முன்னையவர் | புதிய தொகுதி |
| பின்னவர் | |
| பெரும்பான்மை | 5,960 (1974)[1] |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Rajasingam a/l Rasiah 1935 |
| இறப்பு | 2 நவம்பர் 2016 (வயது 81)[2] |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| பிள்ளைகள் | டாக்டர் தாகிணி |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | வழக்கறிஞர் |
டத்தோ ராசையா ராஜசிங்கம் (ஆங்கிலம்; மலாய்: Rasiah Rajasingam அல்லது Rajasingam a/l Rasiah) என்பவர் மலேசிய அரசியல்வாதி, வழக்கறிஞர்; 1974 முதல் 1978 வரை ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியின் (Jelutong Federal Constituency) உறுப்பினராக பதவி வகித்தவர்; 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவின் 4-ஆவது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் கெராக்கான் கட்சி (Gerakan) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
அரசியல் ரீதியாக, 1974-இல் பாரிசான் நேசனல் கூட்டணியின் சார்பில் ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியை வென்றார். பின்னர், 1980-களில் நடைபெற்ற பாயா தெருபோங் மற்றும் பெங்காலான் கோத்தா இடைத்தேர்தல்களில் சுயேச்சையாகவும் போட்டியிட்டுள்ளார். அரசியல்வாதியாக மட்டுமின்றி, மலேசியா, பினாங்கு மாநிலத்தில் ஒரு புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞராகவும் இவர் செயல்பட்டார்.
அரசியல்
[தொகு]பினாங்கின் ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி வரலாற்று ரீதியாக எதிர்க்கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்டது. 1974-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத்தேர்தலில் (GE4), ராசையா ராஜசிங்கம் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அவர் 16,112 வாக்குகளைப் பெற்று (46.5%) அதிகப் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றார்.
நாடாளுமன்றப் பதவிக்குப்பிறகு, பினாங்கில் ஏற்பட்ட சில அரசியல் மாற்றங்களால் அவர் சுயேச்சையாகப் போட்டியிடத் தொடங்கினார். 1982-இல் பினாங்கு மாநிலத்தின் பாயா தெருபோங் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இருப்பினும் வெற்றி பெறவில்லை.
பொது
[தொகு]பார்லோ சேம்பர்ஸ் வழக்கு
[தொகு]1980-களில் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆத்திரேலிய நாட்டவர்களான பார்லோ மற்றும் சேம்பர்ஸ் (Barlow and Chambers) போதைப்பொருள் கடத்தல் வழக்கில்,[3] குற்றம் சாட்டப்பட்ட ஜெப்ரி சேம்பர்ஸ் (Geoffrey Chambers) தரப்பு வழக்கறிஞராக ராசையா ராஜசிங்கம் வாதாடினார்;[4] மற்றொரு கைதியான கெவின் பார்லோவுக்கு (Kevin John Barlow) புகழ்பெற்ற வழக்கறிஞர் கர்பால் சிங் வாதாடினார்.[5]
ராசையா ராஜசிங்கம் அவர்கள், பினாங்கு வழக்கறிஞர்கள் மத்தியில் மிகவும் எளிமையானவராகவும்; பழகுவதற்கு இனிமையானவராகவும்; உதவி தேவைப் படுபவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நினைவு கூரப்படுகிறார். பினாங்கில் ஆர். ராஜசிங்கம் அண்ட் கோ (R. Rajasingham & Co) என்ற பெயரில் சொந்தமாகச் சட்ட நிறுவனம் நடத்தி வந்தார். இன்றும் அந்த நிறுவனம் செயல்பாட்டில் உள்ளது.
அவசரகால சிறப்பு ஒழுங்குமுறைகள் சட்டம்
[தொகு]1977-ஆம் ஆண்டில், மலேசிய அரசாங்கம் கொண்டு வந்த அவசரகால சிறப்பு ஒழுங்குமுறைகள் சட்டத்திற்கு (Essential Special Cases Regulations 1975 - ESCAR)[6] எதிராக, வழக்கறிஞர்கள் நீதிமன்ற வழக்குகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த கர்பால் சிங்கிற்கு ஆதரவாக வழிமொழிந்தவர் ராசையா ராஜசிங்கம் ஆவார்.
அந்தச் சட்டத்தை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர்கள் சங்கமும் (Malaysian Bar) போராடியது. அதே வேளயில் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி, மக்களாட்சி உரிமைகளுக்காக டத்தோ ராசையா ராஜசிங்கம் எடுத்த துணிச்சலான முடிவு ஒரு வரலாற்று முடிவு என அறியப்படுகிறது.[7][8]
வாழ்க்கை
[தொகு]ராசையா ராஜசிங்கம் அவர்களின் பூர்வீகம் இலங்கைத் தமிழர் பின்னணியைக் கொண்டதாகும். அவர் தம்முடைய வாழ்நாளின் பெரும்பகுதியை அரசியல் மற்றும் சட்டப் பணிகளின் காரணமாக, பினாங்கு மாநிலத்திலேயே வசித்து வந்ததால், அவர் ஒரு பினாங்கு மனிதராகவே அறியப்படுகிறார்.
2016-இல் அவர் மறைந்தபோது, எளிமையான அணுகுமுறை கொண்ட மூத்த வழக்கறிஞர் (Approachable person with a colourful character) என்று மலேசிய வழக்கறிஞர்கள் சங்கம் தங்களின் வரலாற்றுப் பக்கங்களில் புகழாரம் சூட்டியது.[9]
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
% | எதிரணி | பெற்ற வாக்குகள் |
% | மொத்த வாக்கு |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1964 | P050 ஜெலுத்தோங் | ராசையா ராஜசிங்கம் (பாரிசான்) | 16,112 | 46.45% | கூய் கோக் செங் (ஜசெக) | 10,152 | 13.6% | 35,560 | 5,960 | 17.2% | ||
| வி. டேவிட் (பெகெமாஸ்) | 6,955 | 20.1% | ||||||||||
| தே எங் சியாங் (மக்கள் கட்சி) | 1,467 | 4.23 % | ||||||||||
மேற்கோள்
[தொகு]- ↑ "Rajasingam a/l Rasiah (W1, L1); P.043 Jelutong; GE-04; Pulau Pinang". ElectionData.MY. Retrieved 16 May 2026.
- ↑ "Datuk R. Rajasingam has passed away at the age of 81 due to a lung infection.". Star Media Group Berhad. Retrieved 16 May 2026.
- ↑ Hiett, Peter (7 July 1986). "Brian Chambers and Kevin Barlow executed in Malaysia". The Guardian. and agencies (London). https://www.theguardian.com/theguardian/1986/jul/07/fromthearchive. பார்த்த நாள்: 21 January 2009.
- ↑ Schauble, John (23 June 1986). "Hope runs out after 32 months under the shadow of the gallows". The Age (Australia): p. 12.
- ↑ "1985: Drug traffickers' appeal rejected". BBC News. 18 December 1985. https://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/18/newsid_2538000/2538319.stm.
- ↑ Yatim, Rais (1995). Freedom Under Executive Power in Malaysia: A Study of Executive Supremacy, p. 222. Endowment Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-99984-0-4.
- ↑ Amnesty International (1999). Human Rights Undermined: Restrictive Laws in a Parliamentary Democracy பரணிடப்பட்டது 2008-10-10 at the வந்தவழி இயந்திரம். Retrieved December 28, 2006.
- ↑ Gibbs, Richard (2002). President's View: No guts, no allegory பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம். Retrieved December 28, 2006.
- ↑ "THE late lawyer-politician Datuk R. Rajasingam was an approachable person with a colourful character, said lawyer Datuk Baljit Singh.". Star Media Group Berhad. Retrieved 16 May 2026.
நூல்கள்
[தொகு]- Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
- Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.