ராசு மதுரவன்
Appearance
ராசு மதுரவன் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கருப்பையா எனும் இயற்பெயருடைய இவர் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த இவர் பூமகள் ஊர்வலம் எனும் தமிழ்த் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மரணம்
[தொகு]ராசு மதுரவனுக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்குத் தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. புற்றுநோயின் தாக்கத்தால் அவதிப்பட்ட இவர் சூலை 8, 2013 ல் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனளிக்காமல் தன்னுடைய 49வது வயதில் மரணமடைந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "புற்றுநோயால் இயக்குநர் ராசு மதுரவன் மரணம்!!". Archived from the original on 2013-07-16. பார்க்கப்பட்ட நாள் 2013-07-13.