உள்ளடக்கத்துக்குச் செல்

ராசா சிவ பிரசாத்து கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசா சிவ பிரசாத்து கல்லூரி
வகைஇளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி
சார்புபினோத் பிகாரி மக்தோ கோயலாஞ்சல் பல்கலைக்கழகம்
முதல்வர்ஜே. என். சிங்
அமைவிடம்
பெல்காரியா, தன்பாத் - சிந்த்ரி சாலை, ராஜபூர்,
, , ,
828111
,
23°45′03″N 86°24′34″E / 23.750878°N 86.4095097°E / 23.750878; 86.4095097
வளாகம்புறநகர்ப்பகுதி
இணையதளம்www.rspcollege.org
ராசா சிவ பிரசாத்து கல்லூரி is located in சார்க்கண்டு
ராசா சிவ பிரசாத்து கல்லூரி
Location in சார்க்கண்டு
ராசா சிவ பிரசாத்து கல்லூரி is located in இந்தியா
ராசா சிவ பிரசாத்து கல்லூரி
ராசா சிவ பிரசாத்து கல்லூரி (இந்தியா)

இராசா சிவ பிரசாத்து கல்லூரி (Raja Shiva Prasad College) என்பது சார்க்கண்டு மாநிலம், பகத்டிக்டில் ஜாரியா-தன்பாத் சாலையில், ஜாரியா அருகே அமைந்துள்ள கலை, அறிவியலுக்கான இளநிலை, வணிகத்திற்கான முதுநிலைப் பட்டக் கல்லூரி ஆகும். நிலத்தடி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இது 2018ஆம் ஆண்டில் 5 கி.மீ தொலைவில் உள்ள பெல்கேரியாவுக்கு மாற்றப்பட்டது.[1][2][3]

வரலாறு

[தொகு]

ஜாரியாவின் முன்னாள் மன்னரான காளி பிரசாத் சிங், இப்பகுதியில் ஒரு கல்லூரியின் தேவையை உணர்ந்தார். மேலும் இவர் தனது தந்தை, மறைந்த மன்னர் சிவ பிரசாத் சிங்கின் நினைவாக இராஜா சிவ பிரசாத் கல்லூரியைத் தொடங்குவதற்காக 1949இல் ஒரு அறக்கட்டளையை அமைத்தார்.[4] இக்கல்லூரி இறுதியாக 1951ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[4] இது தன்பாத் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதியின் மிகப் பழமையான கல்லூரியாகும்.[5]

தொடர்புகள்

[தொகு]

1951ஆம் ஆண்டில் இக்கல்லூரி பாட்னா பல்கலைக்கழகத்துடன் தற்காலிக இணைப்பைப் பெற்றது. ஓராண்டு கழித்து 1952இல் பீகார் பல்கலைக்கழகத்துடன் இக்கல்லூரிக்கு நிரந்தரமாக இணைப்பினைப் பெற்றது. 1960இல் ராஞ்சி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, ​​ ராஞ்சிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கு முன்னர், 1992இல் நிறுவப்பட்ட வினோபா பாவே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.[4][5][6] இக்கல்லூரி தற்போது 2017 முதல் தன்பாத்தில் உள்ள பினோத் பிகாரி மக்தோ கோயலாஞ்சல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[7].

பயிற்றுவிக்ககப்படும் பாடங்கள்

[தொகு]

இக்கல்லூரி இளநிலை கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. வணிகவியலில், இது இளநிலை வணிகவியல் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் இரண்டையும் வழங்குகிறது.[5] மேலும், இது இளங்கலை கல்வியியல் மற்றும் இளங்கலை வணிக நிர்வாகப் படிப்புகளையும் வழங்குகிறது.[5]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "RSP College". Jharia.in. Archived from the original on 27 June 2019. Retrieved 19 June 2019.
  2. ↑ "New site for oldest school". The Telegraph, 8 October 201. Retrieved 19 June 2019.
  3. ↑ "Jharia king's family wants royal museum in abandoned building". The Telegraph, 1 January 2019. Retrieved 19 June 2019.
  4. 1 2 3 "New site for oldest school". 8 October 2015 இம் மூலத்தில் இருந்து October 13, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151013112743/http://www.telegraphindia.com/1151008/jsp/jharkhand/story_46681.jsp#.VtxAIeY_yKF.
  5. 1 2 3 4 RSP College
  6. ↑ "Royal bahu steps out Madhavi eyes Jharia mileage". 22 April 2014 இம் மூலத்தில் இருந்து March 6, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306164034/http://www.telegraphindia.com/1140422/jsp/jharkhand/story_18264455.jsp#.Vtw_j-Y_yKF.
  7. ↑ "Affiliated College of Binod Bihari Mahto Koyalanchal University".