ராசாத்தி வரும் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசாத்தி வரும் நாள்
இயக்கம்ரஃபி
தயாரிப்புஜி. ஸ்ரீதேவி சாகுல்
இசைவிஜய் ஆனந்த்
நடிப்புநாசர்
கஸ்தூரி
மார்த்தாண்டன்
ராதாரவி
ராஜேஷ்குமார்
தியாகு
நிழல்கள் ரவி
பாலாம்பிகா
ஒளிப்பதிவுகபிர்லால்
படத்தொகுப்புமுரளி ராமையா
வெளியீடுதிசம்பர் 13,1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராசாத்தி வரும் நாள் (Rasathi Varum Naal) ரஃபி இயக்கத்தில், 1991 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படமாகும். ஜி. ஸ்ரீதேவி சாகுல் தயாரிப்பில், விஜய் ஆனந்த் இசை அமைப்பில். 13 டிசம்பர் 1991 ஆம் ஆண்டு வெளியானது. நிழல்கள் ரவி, கஸ்தூரி, நாசர், ராதாரவி, தியாகு மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3][4]

வகை[தொகு]

பேய்ப்படம்

நடிகர்கள்[தொகு]

நிழல்கள் ரவி, கஸ்தூரி, நாசர், ராதாரவி, தியாகு, பாலாம்பிகா, ராஜேஷ்குமார், ஏ.கே. வீராசாமி, மயில்சாமி, மார்த்தாண்டம், வாசுகி, வாமன் மாலினி.

கதைச்சுருக்கம்[தொகு]

செல்வந்தர் ராஜசேகரின் (நாசர்) மகள் ராதா (கஸ்தூரி). தாயில்லாத ராதா, செல்வ செழிப்பான வாழக்கையை தன் அரண்மனையில் வாழ்ந்து வருகிறாள். படிப்பை முடித்த கையோடு, காவல் அதிகாரி விஜயை (நிழல்கள் ரவி) திருமணம் செய்கிறாள் ராதா. அவளது கால்லூரி சுற்றுலாவின் பொழுது ஒரு பெரிய விபத்திலிருந்து காப்பாற்றப்படும் ராதாவிற்கு ஆபரண பதக்கம் கிடைக்கிறது.

ராதாவிற்கு பல கெட்டக் கனவுகள் வருகின்றன. அவளது நாய் மர்மமான முறையில் இறந்துவிடுகிறது. அந்த பதக்கத்திலிருந்து ஓர் ஆவி ராதாவின் உடலினுள் புகுகிறது. 19 ஆண்டுகளுக்கு முன்பு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் ராத்தாதி (பாலாம்பிகா) இப்போது ஆவியாக வந்திருக்கிறாள். ராஜசேகர், கௌரி, கபாலி, ராஜேஷ்குமார் ஆகியோர் தான் அந்த சம்பவத்திற்கு காரணம் என்பதால், கருணையின்றி ஒருவர் பின் ஒருவராக ராசாத்தி ஆவி பழிவாங்குகிறது. அந்த கொலை வழக்குகளை ஆய்வு செய்யும் காவல் அதிகாரி விஜய், தன் மனைவி ராதா தான் கொலையாளி என்று கண்டுபிடிக்கிறார். பின்னர் என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் விஜய் ஆனந்த் ஆவார். வாலி (கவிஞர்) 4 பாடல்களையும் எழுதினார். நான்கு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு வெளியானது.[5][6]

பாடல்களின் பட்டியல்[தொகு]

 1. மாமா மாமா
 2. முக்கோண சக்கரத்தில்
 3. நான் போடும்
 4. வா கண்மணி

விமர்சனம்[தொகு]

ஒரு வணிக நோக்கு கொண்ட இந்தியத் திகில் படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. "http://spicyonion.com". http://spicyonion.com/movie/rasathi-varum-naal/. 
 2. "http://www.gomolo.com" இம் மூலத்தில் இருந்து 2019-03-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190322171527/http://www.gomolo.com/rasathi-varum-naal-movie/11562. 
 3. "http://www.cinesouth.com" இம் மூலத்தில் இருந்து 2004-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040308114705/http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=rasathi%20varum%20naal. 
 4. "http://www.jointscene.com" இம் மூலத்தில் இருந்து 2009-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090817131846/http://www.jointscene.com/movies/Kollywood/Rasathi_Varum_Naal/10575. 
 5. "http://mio.to" இம் மூலத்தில் இருந்து 2019-03-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190322171532/https://mio.to/album/Rasathi%2BVarum%2BNaal%2B(1995). 
 6. "http://www.saavn.com" இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202025218/http://www.saavn.com/s/album/tamil/Rasathi-Varum-Naal-1995/U89NeIZhzXM_. 
 7. "தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (24-01-2017)". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19911220&printsec=frontpage. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசாத்தி_வரும்_நாள்&oldid=3710304" இருந்து மீள்விக்கப்பட்டது