உள்ளடக்கத்துக்குச் செல்

ராக்னர் நர்க்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராக்னர் நர்க்சு
பிறப்பு(1907-10-05)அக்டோபர் 5, 1907
காரு, உருசியப் பேரரசு (தற்போது எசுத்தோனியா)
இறப்பு(1959-05-06)மே 6, 1959
ஜெனீவா ஏரிக்கு அருகில், சுவிட்சர்லாந்து
தேசியம்எசுத்தோனியர்
நிறுவனம்கொலம்பியா பல்கலைக்கழகம்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஜெனீவா பல்கலைக்கழகம்
பயின்றகம்Domschule zu Reval, தாலின்
டார்டு பல்கலைக்கழகம்
எடின்பர்க் பல்கலைக்கழகம்
வியன்னா பல்கலைக்கழகம்
பங்களிப்புகள்சமச்சீர் வளர்ச்சித் தத்துவம்

ராக்னர் நர்க்சு (Ragnar Nurkse, அக்டோபர் 5, 1907 - மே 6, 1959) ஓர் எஸ்தோனிய நாட்டுப் பொருளியலாளர் ஆவார்.[1] இவர் பன்னாட்டு நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறைகளில் சர்வதேச பொருளாதார வல்லுனரும் கொள்கை தயாரிப்பாளருமாவார்.

வாழ்க்கை[தொகு]

ராக்னர் நர்க்சு எஸ்தோனியாவில் உள்ள காரு என்ற கிராமத்தில் எஸ்தோனியத் தந்தைக்கும் எஸ்தோனிய-சுவீடன் தாய்க்கும் பிறந்தார். இவர் பெற்றோர் 1928ல் கனடாவிற்குக் குடி பெயர்ந்தனர்.

உருசிய மொழி கொண்ட தொடக்கப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்த ராக்னர், செருமன் மொழி போதிக்கும் தாலினில் உள்ள எலைட் கத்தீடரல் பள்ளியில் தனது உயர் கல்வியை 1928ல் முடித்தார். இவர் தனது கல்வியைச் சட்டப் பள்ளியிலும் பொருளியல் துறையில் டார்டு பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தார்.

1932ல் பேராசிரியர் ஃப்ரெட்ரிக் ஓகில்வியின் உதவியுடன் பொருளியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவர் வியென்னா பல்கலைக்கழகத்தில் பயில ஆண்ட்ரூ கார்னேஜி உதவித் தொகையைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kattel, Rainer (2009). Ragnar Nurkse (1907-2007). Anthem Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-786-9. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help) Nurkse's Estonian passport was last extended by the Estonian Consulate General in New York on April 22nd, 1946
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்னர்_நர்க்சு&oldid=3859183" இலிருந்து மீள்விக்கப்பட்டது