ராக்காயி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராக்காயி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகர் மலை காப்புக் காட்டில் அமைந்த அம்மன் கோயிலாகும். இக்கோயில் மதுரை நகரத்திலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில் உள்ளது.

அழகர்மலை மீதமைந்த பழமுதிர் முருகன் கோயிலுக்கு சிறிது தொலவில் உள்ள மலையில் ராக்காயி அம்மன் சன்னதி உள்ளது. இராக்காயி அம்மன் சன்னதி முன் விழும் தீர்த்தத்தின் பெயர் நூபுர கங்கை ஆகும். இதனை சிலம்பாறு என்பவர்.[1]

ராக்காயி அம்மன் சன்னதி முன் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்திலிருந்து நீர் எடுத்து அழகருக்கு அன்றாடம் அபிசேகம் செய்வர். இக்கோயிலின் தல ஜோதி விருட்சம் ஆகும். இக்கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். [2][3]

போக்குவரத்து[தொகு]

மதுரை மாநகரிலிருந்து பேருந்து மூலம் அழகர் கோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்தும், சிற்றுந்துகள் மற்றும் வாடகை வண்டிகள் மூலம், பழமுதிர்சோலை வழியாக ராக்காயி அம்மன் கோயிலை அடையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சிலம்பாறு
  2. அருள்மிகு ராக்காயி அம்மன் கோவில் - மதுரை
  3. ரோகங்களைப் போக்கும் ராக்காயி அம்மன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்காயி_அம்மன்_கோயில்&oldid=3812221" இலிருந்து மீள்விக்கப்பட்டது