ராக்கம்மா கையத் தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"Rakkamma Kaiya Thattu"
பாட்டு by S. P. Balasubrahmanyam, Swarnalatha from the album Thalapathi
வெளியீடு1991
நீளம்7:10
சிட்டைLahari Music
இசையமைப்புஇளையராஜா
பாடலாசிரியர்Vaali (lyrics)
தயாரிப்பாளர்Ilaiyaraaja

 "ராக்கம்மா கையத் தட்டு" (ஆங்கிலம்: ராக்கம்மா, க்ளாப் யுவர் ஹேண்ட்ஸ்) என்பது 1991 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படமான தளபதி என்ற திரைப்படத்தின் ஒரு தமிழ் மொழிப் பாடலாகும். இந்த பாடல் வாலி எழுதியது.  எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வா்ணலதா ஆகியாேரது குரல்களில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு உலகளாவிய பிபிசி வேர்ல்ட் சர்வீஸால் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்த பாடல் நான்காவது மிகப் பிரபலமான பாடல் என்று பெயர்பெற்றது.

பொருளடக்கம்

1 ரெக்கார்டிங்

2 இசை வீடியோ

3 மரபுரிமை

4 குறிப்புக்கள்

5 குறிப்புகள் பதிவு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வா்ணலதா ஆகியாேரது குரல்களில் தளபதி  என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது [1], அதுமட்டுமல்லாமல் முன்னாள் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இளையராஜாவின் கூட்டணியில் கடைசியாக உருவாக்கப்பட்டது.  இது இவா்களது கூட்டணியில் பம்பாயில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடலாகும். [2] இப்பாடல் மணிரத்திணத்தின் வலியுறுத்தலின் பேரில்,   'தேவாரம்' என்ற சைவ பக்தி இலக்கியத்தில் இருந்து வாலியால் எடுக்கப்பட்டதாகும்.