ராக்கம்மா கையத்தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"அடி ராக்கம்மா கையத்தட்டு"
பாட்டு by எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா from the album தளபதி
வெளியீடு1991
நீளம்7:10
சிட்டைலகரி மியூசிக்
இசையமைப்புஇளையராஜா
பாடலாசிரியர்வாலி (lyrics)
தயாரிப்பாளர்இளையராஜா

 

ராக்கம்மா கையத் தட்டு (பாடல்) (Rakkamma Kaiya Thattu - Song) என்பது 1991 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படமான தளபதி என்ற திரைப்படத்தின் ஒரு தமிழ் மொழிப் பாடலாகும். இந்தப் பாடல் கவிஞர் வாலியால் எழுதப்பட்டது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுவர்ணலதா ஆகியாேரது குரல்களில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு உலகளாவிய பிபிசி உலக சேவை நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்த பாடல் நான்காவது மிகப் பிரபலமான பாடல் என்று பெயர்பெற்றது.

பாடல் பதிவு[தொகு]

எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுவர்ணலதா ஆகியாேரது குரல்களில் தளபதி என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது/ [1] அதுமட்டுமல்லாமல் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இளையராஜாவின் கூட்டணியில் கடைசியாக உருவாக்கப்பட்டது.[2]  இது இவா்களது கூட்டணியில் பம்பாயில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடலாகும். மணிரத்தினத்தின் வலியுறுத்தலின் பேரில், 'தேவாரம்' என்ற சைவ பக்தி இலக்கியத்தில் இருந்த “குனித்த புருவமும்” எனத் தொடங்கும் பாடல் வரிகள் இப்பாடலின் இடையில் கவிஞர் வாலியால் பயன்படுத்தப்பட்டது.[2]

மேற்காேள்கள்[தொகு]