ராகி கர்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராக்கிகடி
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Haryana" does not exist.
மாற்றுப் பெயர்ராக்கிகர்கி
இருப்பிடம்ராக்கிகடி, ஹிசார் மாவட்டம், அரியானா, இந்தியா
ஆயத்தொலைகள்29°17′35″N 76°6′51″E / 29.29306°N 76.11417°E / 29.29306; 76.11417ஆள்கூற்று: 29°17′35″N 76°6′51″E / 29.29306°N 76.11417°E / 29.29306; 76.11417
வகைதொல்லியல்களம்
பரப்பளவு80 - 105 ஹெக்டேர்[1]
வரலாறு
கலாச்சாரம்சிந்துவெளி நாகரீகம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1963, 1997–2000, 2011-தற்போது வரை

ராக்கிகடி அல்லது ராக்கி கர்கி (Rakhigarhi, or Rakhi Garhi) (Rakhi Shahpur + Rakhi Khas), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், தில்லியிலிருந்து வடமேற்கே 150 கிமீ தொலைவில் உள்ளது. [2] [3] 80 - 105 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ராக்கிகடி தொல்லியல் களம், அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களை விடப் பெரியதாகும்.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய ராக்கிகடி தொல்லியல் களம் கிமு 6420 - 6230 மற்றும் கிமு 4470 - 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, கிமு 2600 - 1900களில் உச்சத்திலிருந்த சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.[4] இத்தொல்லியல் களம் காகர் ஆற்றிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது.[5]

ராக்கிகடி தொல்லியல் களம் 105 ஹெக்டேர் நிலப்பரப்பில்[6][7] உள்ள ஏழு மலைக் குன்றுகளைக் கொண்டுள்ளது.[8]

ராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இத்தொல்லியல் கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் அப்போது அரசால் வெளியிடப்படுகிறது.

மே, 2012ல் ராகி கர்கி தொல்லியல் களத்தை, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள, ஆசியாவின் பத்து தொல்லியல் களங்களில் ஒன்றாக உலகாளவிய பாரம்பரிய நிதியம் அறிவித்துள்ளது. [9] [10]

ராகி கர்கி தொல்லியல் களத்தைச் சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். [11]

இத்தொல்லியல் களத்திற்கு அருகே காளிபங்கான் குணால், பாலு மற்றும் பிரானா போன்ற சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் உள்ளது.[12]

தொல்லியல் அறிஞர் ஜான் மெக்லிண்டோசு கருத்துப்படி, இத்தொல்லியல் களம், வேதங்களில் கூறியுள்ள, சிவாலிக் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திரிஷ்டாவதி ஆற்றுச் சமவெளிகளில் ராக்கிகடி தொல்லியல் களம் உள்ளது.[13]

அகழ்வாராய்ச்சிகள்[தொகு]

முதலில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1963, 1997–2000களில் ராக்ககடி தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்தது. பின்னர் 2011 முதல் டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இத்தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்து வருகிறது. அகழாய்வில் 11 மனித எலும்புக் கூடுகள் மற்றும் தொல் பொருட்கள் கண்டெக்கப்பட்டது.[14] கண்டெத்த மனித எலும்புக் கூடுகளை மரபணு சோதனை செய்தவற்கு உதவியாக, தென் கொரியா நாட்டின் சியோல் தேசிய தேசிய மருத்துவப் பல்கலைகழகத்தை அகழாய்வுப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

கால நிர்ணயம்[தொகு]

ராக்கி கடி தொல்லியல் களத்தில் கிடைத்த ஆறு தொல்பொருட்களை, 2014ல் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பரிசோதனை செய்ததன் மூலம், இத்தொல்லியல் களம் கிமு 6420 - 6230 மற்றும் கிமு 4470 - 4280 ஆகிய இரண்டு காலங்களுக்கு இடைப்பட்ட காலத்தியது என அறியப்பட்டுள்ளது. and years before present, converted to B.C.E. and B.C.E.[12]

தொல்லியல் கண்டுபிடிப்புகள்[தொகு]

ராக்கிகடி தொல்லியல் களத்தில் கிடைத்த மனித எலும்புக் கூடு, தேசிய அருங்காட்சியகம், புது டில்லி

ராக்கிகடி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்கையில் 1.92 மீட்டர் அகலம் கொண்ட வீதிகளுடன் கூடிய நகர அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. காளிபங்கானில் கிடைத்த மட்பாண்டங்கள் போன்றவைகளே இங்கும் கிடைத்துள்ளது.

குழிகளைச் சுற்றியுள்ள சுவர் அமைப்புகள் ஈமச் சடங்குகளுக்கானது என அறியப்படுகிறது. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வடிகால்களும், சுடுமட்சிலைகளும், எடைக்கற்களும், வெண்கலப் பொருட்களும், சீப்பு, செப்பு உலோக மீன் தூண்டில்கள், இரும்பு ஊசிகள் மற்றும் சுடுமண் முத்திரைகளும் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் கிடைத்துள்ளது. ஒரு தங்கப்பட்டறையில் துருத்தியும், பட்டைத் தீட்டப்படாத 3,000 நவரத்தினக் கற்கள் கிடைத்துள்ளது. ஒரு புதைகுழியில் மண்டையோட்டுடன் கூடிய 11 எலும்புக் கூடுகளும், ஈமப் பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவைகளில் மூன்று பெண்களின் எலும்புக் கூடுகளின் மணிக்கட்டில் சங்கு வளையல்கள் இருந்தன. [15]

ஏப்ரல், 2015ல் எலும்புக்கூடுகளை கதிரியக்க கரிமப் பரிசோதனை முடிவில், அவைகள் 4,500 ஆண்டுகளுக்கு முந்தையது என அறியப்பட்டுள்ளது.[16] மேலும் அக்கினி குண்ட அமைப்புகள் ராகி கர்கியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தானியக் களஞ்சியம்[தொகு]

முதிர் அரப்பா (கிமு 2600 - 2000 ) காலத்திய தானியக் களஞ்சியம் ராக்கிகாடி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 செவ்வக மற்றும் சதுர அறைகளுடன் கூடிய களிமண் - செங்கற்களால் ஆன இத்தானியக் களஞ்சியம் தரையில் பொதித்து நிறுவப்பட்டுள்ளது. புழு, பூச்சிகள் அரிக்காதவாறும், ஈரப்பதம் புகாதவாறு தானியக் களஞ்சியத்தின் அடிப்பரப்பில், சுண்ணாம்புடன் கூடிய உலர் புற்கள் பரப்பி வைத்துள்ளனர். [17]

கல்லறை[தொகு]

ராக்கிகடி தொல்லியல் களத்தில் முதிர் அரப்பா காலத்திய 8 கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் செங்கற்களால் மூடப்பட்ட கல்லறைகளுக்கு நடுவில் ஒரு கல்லறையில் ஒரு மரச் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.[18]:293 புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூட்டின் வயிற்றுப் பகுதியில் ஒட்டுண்ணிகளின் முட்டைகள் காணப்பட்டது. இவ்விடத்திய மனிதத் தோற்றத்தை அறிய எலும்புகளையும், ஒட்டுண்ணிகளின் முட்டைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. [19] [20]

மரபணு சோதனை முடிவுகள்[தொகு]

இத்தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் இரண்டை மரபணு சோதனை செய்ததில், அம்மரபணுகள், தமிழ்நாடு மற்றும் கேரளா மலைக்காடுகளில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் மரபணுவை மிகவும் ஒத்துள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[21]மேலும் இம்மரபணுக்கள் ஆரியர்களின் மரபணுவுடன் சிறிதும் ஒத்துப்போகவில்லை என ஆய்வில் தெரியவருகிறது.[22]

அருங்காட்சியகம்[தொகு]

சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு தொல்லியல் களமான ராக்கிகடியில், அரியானா மாநில அரசு ஒரு தொல்லியல் அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது. அதில் ராக்கிகடி தொல்லியல் களத்தில் கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [23]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Sharma, Rakesh Kumar; Singh, Sukhvir (May 2015). "Harrapan interments at Rakhigarhi". International Journal of Informative & Futuristic Research (IJIFR) 2 (9): 3403–3409. பன்னாட்டுத் தர தொடர் எண்:2347-1697. http://www.ijifr.com/pdfsave/30-05-2015497V2-E9-082.pdf. பார்த்த நாள்: 11 May 2016. 
  2. Rita P. Wright (2009), The Ancient Indus: Urbanism, Economy, and Society, Cambridge University Press, p. 133, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-57219-4, https://books.google.com/books?id=gAgFPQAACAAJ, பார்த்த நாள்: 29 September 2013 
  3. Census of India, 2011
  4. Tejas Garge (2010), Sothi-Siswal Ceramic Assemblage: A Reappraisal. Ancient Asia. 2, pp.15–40. எஆசு:10.5334/aa.10203
  5. Rita P. Wright (2009), The Ancient Indus: Urbanism, Economy, and Society, Cambridge University Press, p. 133, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-57219-4, https://books.google.com/books?id=gAgFPQAACAAJ, பார்த்த நாள்: 29 September 2013  Quote: "There are a large number of settlements to the east on the continuation of the Ghaggar Plain in northwest India. ... Kalibangan, Rakhigarhi, and Banawali are located here. Rakhigarhi was over 100 hectares in size."
  6. Harappa’s Haryana connect: Time for a museum to link civilisations
  7. Indian Society for Prehistoric and Quaternary Studies| volume = XL| issue = 2| pages = 11
  8. Defining the Economic Space of the Harappan Rakhigarh
  9. Global Heritage Fund
  10. {cite web |title = Rakhigarhi likely to be developed into a world heritage site |publisher=India Today | url = http://indiatoday.intoday.in/story/rakhigarhi-all-set-to-be-developed-as-a-heritage-site-as-plans-road-to-fame-through-harappa/1/260032.html | date=31 March 2013| accessdate = 2013-08-08}
  11. "Can Rakhigarhi, the largest Indus Valley Civilisation site be saved?". Sunday Times (3 June 2012). பார்த்த நாள் 5 June 2012.
  12. 12.0 12.1 Nath, Amarendra, Tejas Garge and Randall Law, 2014. Defining the Economic Space of the Harappan Rakhigarhi: An Interface of the Local Subsistance Mechanism and Geological Provenience Studies, in Puratattva 44, Indian Archaeological Society, New Delhi, pp. 84 academia.edu
  13. J ane McIntosh, The Ancient Indus Valley: New Perspectives. Understanding ancient civilizations. ABC-CLIO, 2008 ISBN 1576079074 p76
  14. சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட ஜோடி எலும்புக்கூடுகள்
  15. "Dig this! 5,000-yr-old skeletons found in Hisar". Hindustan Times. 15 April 2015. http://www.hindustantimes.com/haryana/archaeologists-find-5-000-yr-old-skeletons-at-rakhigarhi-in-hisar/article1-1337371.aspx. 
  16. "Virtual Harappans to come alive". The Hindu. 3 May 2015. http://www.thehindu.com/news/national/other-states/virtual-harappans-to-come-alive/article7165745.ece. 
  17. "Ancient granary found in Haryana". The Hindu. 2 May 2014. http://www.thehindu.com/news/national/other-states/ancient-granary-found-in-haryana/article5966952.ece. 
  18. McIntosh, Jane R. (2008). The ancient Indus Valley : new perspectives. Santa Barbara, Calif.: ABC-CLIO. பக். 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. https://books.google.com/?id=1AJO2A-CbccC. 
  19. "Scientists to study parasite eggs in Harappan graves". The Times of India. 12 January 2014. http://timesofindia.indiatimes.com/city/pune/Scientists-to-study-parasite-eggs-in-Harappan-graves/articleshow/28692622.cms. 
  20. "Biomedical Studies on Archaeology" (19 February 2014).
  21. Why Hindutva is Out of Steppe with new discoveries about the Indus Valley people
  22. Do Rakhigarhi DNA findings debunk the Aryan invasion theory or give it more credence?
  23. அரப்பன் அருகாட்சியகம், ராக்கிரகடி, அரியானா

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகி_கர்கி&oldid=2630013" இருந்து மீள்விக்கப்பட்டது