ரஹத் நுஸ்ரத் ஃபத்தே அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


ரஹத் பதே அலி கான்
<--Only for images smaller than 220px! -->
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரகத் பதே அலி கான்
பிறப்பு1974, பைசலாபாத், பஞ்சாப், பாகிஸ்தான்
பிறப்பிடம்பாக்கித்தான்
இசை வடிவங்கள்கவ்வாலி
தொழில்(கள்)பாடகர், இசைக்கலைஞர், பதிப்பிக்கும் கலைஞர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்

ரஹத் நுஸ்ரத் ஃபத்தே அலி கான் (பாகிஸ்தானின் பஞ்சாபிலுள்ள[1] பைசலாபாத்தில் 1974 ஆம் ஆண்டு பிறந்தவர்) பாகிஸ்தான் இசைக்கலைஞர் மற்றும் முதன்மையாக சுஃபிக்களின் (இஸ்லாமியத்திலேயே உள்ள ஒரு உள்ளுணர்வு ரீதியான மரபு) பக்தி இசை வகையான கவ்வாலி இசைப் பாடகர் ஆவார். இவர் உஸ்தாத் நுசுரத் பதே அலி கானின் உறவினர் ஆவார்.[1] கவ்வாலி மட்டுமின்றி, கசல்கள் மற்றும் பிற மெல்லிசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். பாகிஸ்தான், இந்தியா மற்றும் உலகெங்கிலும் பயணம் செய்து இவர் பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கையும் பயிற்சியும்[தொகு]

1974 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பஞ்சாபிலுள்ள பைசலாபாத்தில் பாகிஸ்தானின் மரபு வழி இசைக் குடும்பத்தில் பிறந்தார். ஃபரூக் ஃபத்தே அலி கானின் மகனான ரஹத், அவருடைய மாமா நுஸ்ரத் ஃபத்தே அலி கானிடம் கவாலி மற்றும் சாஸ்திரீய இசைப் பயிற்சி பெற்றார்.[3]

தொழில் வாழ்க்கை[தொகு]

இவருடைய முதல் பொது இசையரங்கு நிகழ்ச்சியானது அவரது பத்து அல்லது பதினோராம் வயதில் 1985 ஆம் ஆண்டில் அவரது மாமாவுடன் இங்கிலாந்துக்குப் பயணம் செய்த போது நடைபெற்றது. அங்கு கவாலி பார்டியில் பாடியதுடன் தனிப் பாடல்களையும் பாடினார்.[4] 1985 ஜூலை 27 இல் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தனி கஸல் பாடலான முக் டேரா சோஹ்நேயா ஸர்ப் நலுன் சங்கா ஐ பாடினார். ஹாரோ லெஸர் சென்டரில் 1985 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜின் ஜின் டாரி லாங் கியான் ராட்டான் என்ற தனிப்பாடலைப் பாடினார். மான் கி லகான் என்ற ஹிட் பாடல் இடம்பெற்ற பாப் (2004) என்னும் திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் பின்னணி பாடகராக அறிமுகமானார். இவரது பாடல் திறமையின் மூலம் இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமானார். [8].

சவுண்ட் ட்ராக்குகள் மற்றும் சர்வதேச பங்களிப்புகள்[தொகு]

தனது மாமா நுஸ்ரத் ஃபத்தே அலி கானுடன் பியல் ஜாம் என்னும் அமெரிக்க ராக் இசைக்குழுவைச் சேர்ந்த எட்டி வேடருடன் இணைந்து ரஹத் 1995 ஆம் ஆண்டின் ஹாலிவுட் திரைப்படமான டெட் மேன் வாகிங் படத்தின் சவுண்ட் ட்ராக்கில் பாடினார்.

அவர் 2002 ஆம் ஆண்டில் ஆர்கெஸ்ட்ரா மற்றும் திரை இசை இசையமைப்பாளரான ஜேம்ஸ் ஹார்னருடன் இணைந்து ஃபோர் ஃபெதர்ஸ் படத்தின் சவுண்ட் ட்ராக்கில் பணிபுரிந்தார்.[5] 2002 ஆம் ஆண்டில் தி டேரக் ட்ரக்ஸ் இசைக்குழுவின் ஜாய்ஃபுல் நாய்ஸ் என்ற ஆல்பத்திற்காக "மகி மத்னி" என்ற பாடலில் கௌரவப் பங்களிப்பை வழங்கினார்.

மிகவும் சமீபத்தில் மெல் கிப்சனின்அப்போக்கலிப்டோ வின் சவுண்ட் ட்ராக்கில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தானின் தேசபக்திப் பாடல்களான "தார்தி தார்தி" மற்றும் "ஹம் பாகிஸ்தான்" மற்றும் பாலிவுட் படங்களின் பாடல்கள் ஆகியன அவரது சமீபத்திய பணிகளில் அடங்கும்.

இசைச்சரிதம்[தொகு]

ஒற்றைப் பாடல்கள்
தார்தி தார்தி
மேன் டெனு சம்ஜ்ஹவான் கி
ஹம் பாகிஸ்தான்
அமன் கி ஆஷா
வெளியிடப்பட்ட ஆல்பங்கள்
ஆண்டு ஆல்பம்
தஸ்வீர் - தொகுதி. 11
புல்புல் கோ ஃபூல்
ஜினன் டி மகி தூர் வஸ்தே
மா ஆர் தீ - தொகுதி.13
டார் மேரி பெரி - தொகுதி.5
ஆன்க் சி ஆன்க் மிலோ- தொகுதி.9
கஃபி வாலி காலி விக் யார் டா முகன் - தொகுதி.7
பிலாடி சாகிய - தொகுதி.2
அலி மவ்லா அலி- தொகுதி.3
சஃபினா குலாம்- தொகுதி. (14)
ரபா மேரா யார் மோர்ஹ் டி- தொகுதி.10
மேரி டஃபா கரோ க்யாபால்- தொகுதி.15
சாகெர் க்யாரீப் ஹாய்- தொகுதி.17
ஸர்-இ-ஹுடா - தொகுதி.22
ஜஸன்-இ-மிலாட் அல் நபி - தொகுதி.21
பெஸ்ட் ஆப் கான் தொகுதி.12
பெஸ்ட் ஆப் கான் பகுதி 2- தொகுதி.6
பர்தேசியா 2.தொகுதி.20
மைட்டி கிங்- தொகுதி.23
க்ரை ஃபார் யூ- தொகுதி. [1]
வாய்சஸ் ஃப்ரம் அபோ-தொகுதி. 4
மைனி பாட்டில் சி கர்னி ஹாய் ஸாடி(தொகுதி.8)
மாஹ் ஜந்தா ஹோயா (தொகுதி.4)
ஆஹான் ஹிஜிர் டேரி னி லாலியான் (தொகுதி.5)
இஸ்க் அன்கியோன் சூ நிண்ட்ரான்(தொகுதி.9)
ஸாஸ்வர் இ கர்பாலா தொகுதி.6
பெஸ்ட் ஹிட்ஸ் ரஹத் ஃபத்தே அலி கான்
ஜனாஸீன் தொகுதி.1
ஜனாஸீன் தொகுதி.2
ஜனாஸீன் தொகுதி.3
ஜனாஸீன் தொகுதி.4
ஜனாஸீன் தொகுதி.5
ரட் ஸ்வான் கி
சானு ராஹ் லான் வாலியா
ரஹத்
ஆனாஹ் சி அன்ஹ் மிலோ
பர்தேசியா
2007 சர்கா
2009 நஸ்ரான-இ-அக்யூடாட்
2009 ரிமம்பரிங் நுஸ்ரத் - உஸ்தாத் நுஸ்ரத் ஃபத்தே அலி கான் நினைவு இசை நிகழ்ச்சி
2009 கோய் உமீத்
சவுண்ட் ட்ராக் பாகிஸ்தானி நாடங்கள்
தொடர் பாடல்
குதா ஸாமீன் சி கயா நஹின் குதா ஸாமீன் சி கயா நஹின்
மெரி ஸாத் ஸாரா-இ-பெனிஸான் மெரி ஸாத்
பஹர்டே ஜோலி பஹர்டே ஜோலி
அனோஹா பநதன் பிவாஃபா
கைசா யாஹ் ஜுனூன் கைசா யாஹ் ஜுனூன்
ஜும்கா ஜான் ஜிந்தாகி இஸ்க் ஹேய்
சூபன் இஸ்க் பி ஹெய் சூபன்
பாலிவுட் படங்களின் சவுண்ட் ட்ராக்
ஆண்டு திரைப்படம் பாடல்
2004 பாப் லால்(ஆலாப்) & மான் கி லகான்
2005

கல்யுக்

ஜியா தாதக் தாதக் ஜாயி & துஜ்கி தேக் தேக்
2006

ஓம்காரா

நைநா
2007 ஜூம் பாராபர் ஜூம் போல் நா ஹல்கி ஹல்கி
2007 ஓம் சாந்தி ஓம் ஜக் சூனா சூனா லகி
2007 நமஸ்தே லண்டன் மெயின் ஜஹான் ரஹூன், மெயின் ஜஹான் ரஹூன் (மெக்ஃபில் மிக்ஸ்)& மெயின் ஜஹான் ரஹூன் ரீமிக்ஸ்
2007

ஆஜா நாச்லே

O ரீ ஃபியா
2008

சிங்க் இஸ் கிங்

டெரி ஒரே, டெரி ஒரே(லாங்ஹ் மிக்ஸ்)
2008 ஹால்-இ-தில் ஹால்-இ-தில்
2008

உட்ஸ்டாக் வில்லா

கொய் சாலா ஜா ரஹா ஹெய்
2008

தில் கபடி

ஜிந்தாகி யீ, ஜிந்தாகி யீ(ராக் வரிசை)
2009 ஆஸ்மா மேன் பவ்ரா, மேன் பவ்ரா(லாங்ஹ் மிக்ஸ்)
2009 மெயின் அர் மிர்ஸ் கன்னாஹ் ராபா
2009 பில்லு பார்பர் ஜாகூன் கான்
2009

லவ் ஆஜ் கல்

ஆஜ் தின் சத்தேக்யா(ஸ்டார் ஸ்கீரின் விருதின் சிறந்த பின்னனி பாடகர்)
2009 தேக் பாகி தேக் ஆன்கோன் மெயின் ஹியான், ஆன்கோன் மெயின் ஹியான்(அன்ப்ளக்ட்),சப்னே பாகி ஹென்
2009 ஜக் ஜியண்தியான் டீ மீலே(பஞ்சாபி) ஜக் ஜியண்தியான் டீ மீலே
2009 இலண்டன் ட்ரீம்ஸ் க்வாம் ஜோ
2009

தே டன டேன்

ரிஸ்தே னேட்
2009 வீர் சுரிலி அஹியான் வாலே(டூயட்)
2010 மை நேம் இஸ் கான் சஜ்டா
2010 இஸ்கியா தில் டூ பச்சஹா ஹாய் ஜி
2010 டோஹ் பாட் பாக்கி ப்ர் சி
2010

லாகூர்

ஒரி பாண்டி,ft சில்பா ராவ்
ஹாலிவுட் சவுண்ட் ட்ராக்குகள்
ஆண்டு திரைப்படம்
1995 டெட் மேன் வாக்கிங்
2002 ஃபோர் ஃபெதர்ஸ்
2006 அப்போக்கலிப்டோ
கூட்டுப்பணிகள்
கலைஞர் ஆல்பங்கள் பாடல் ஆண்டு
தி டேரேக் ட்ர்க்ஸ் பேண்ட் ஜாய்ஃபுல் நாய்ஸ் மகி மத்னி 2002
சுக்சிந்தர் சிந்தா கூட்டுப்பணிகள் 2 கும் சம் 2009

குறிப்புதவிகள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.answers.com/topic/rahat-fateh-ali-khan
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "ப்ரின்சஸ் ஆஃப் கவாலிஸ்". 2010-01-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. நுஸ்ரத் ஃபத்தே அலி கான் டிவிடி இங்கிலாந்தில் நேரடி நிகழ்ச்சி தொகுதி. 8 ஓரியண்டல் ஸ்டார் ஏஜன்சிஸ்
  5. http://www.discogs.com/James-Horner-Rahat-Nusrat-Fateh-Ali-Khan-The-Four-Feathers-Original-Motion-Picture-Soundtrack/release/1797785

புற இணைப்புகள்[தொகு]