உருசிய மாநில நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரஷ்ய மாநில நூலகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருசிய மாநில நூலகம்
நூலகத்தின் முக்கிய கட்டிடம், ( தஸ்தயெவ்ஸ்கியின் நினைவிடத்திற்கு முன்புறம்)
தொடக்கம்1862 (162 ஆண்டுகளுக்கு முன்னர்) (1862)[1]
அமைவிடம்மாஸ்கோ, ரஷ்ய
கிளைகள்3
Collection
அளவு44,800,000 (2012)
Access and use
Population served93,100 (2012)
ஏனைய தகவல்கள்
நிதிநிலைussian ruble 1,740,000,000 (2012)
இயக்குநர்முதல் அலெக்ஸான்டர். விஸ்லே (பொது இயக்குனர்), முதல் விளாடிமிர். Gnezdilov (Executive Director), Viktor V. Fiodorov (President) [1]
பணியாளர்கள்1830 (2012)
இணையதளம்http://www.rsl.ru/en
Map
Map

உருசிய மாநில நூலகம் (Russian State Library) என்பது உருசியாவில் உள்ள ஒரு தேசிய நூலகம். இது ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ளது. இந்நூலகம் நூல்களின் தொகுப்பின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நூலகம் என்ற பெருமைக்குறியது. இங்கு சுமார் 17.5 மில்லியன்கள்[2] நூல்களின் தொகுப்புகள் உள்ளது. இந்நூலகத்திற்கு 1925 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் விளாதிமிர் லெனின் மாநில நூலகம் என்று பெயரிடப்பட்டது. மேலும் இந்தப் பெயர், 1992 ஆண்டில் ரஷ்ய மாநில் நூலகம் என்று பெயர் மாற்றம் செய்யும் வரையில் அழைக்கப்பட்டது.

இந்த நூலகத்தில் 275 கிமீ நீலம் உள்ள அலமாரிகளில் 43 மில்லியன்[1] பொருட்களின் தொகுப்புகள் உள்ளது. அவற்றுள் 17 மில்லியன் புத்தகங்கள் உட்பட மற்றும் 13 மில்லியன் பத்திரிகைகள், 350 ஆயிரம் இசை பதிவுகள் மற்றும் ஒலிப்பதிவுகள், 150,000 வரைபடங்கள் மற்றும் பல அடங்கியுள்ளன. உலகில் உள்ள 247 மொழிகளின் நூல்கள் இங்கு சேகரித்து வைக்கப் பட்டுள்ளது. நூலகத்தில் உள்ள மொத்த சேகரிப்புகளில், வெளிநாட்டு தொகுப்புகளின் பங்களிப்பு 29 சதவீதமாக உள்ளது.

சோவியத் ஒன்றியத்தில் 1922 ஆண்டு முதல் 1991 ஆண்டு வரையில் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு புத்தகம், நூலகத்தில் வைப்பு செய்யப்பட்டது. இன்றும் இந்த நடைமுறை தொடர்கிறது. மேலும் இந்நூலகம் சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வ வைப்பு நூலகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

சூலை 1, 1862 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் இலவச பொது மக்கள் நூலகம், மாஸ்கோ பொது அருங்காட்சியகம் மற்றும் ருமியன்ட்சேவ் அருங்காட்சியகம் அல்லது ருமியன்சேவ் நூலகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நூலகத்திற்கு "லெனின்கா"[3] என்ற பட்டப் பெயருண்டு.

முதலில் ருமியன்சேவ் அருங்காட்சியகம் மாஸ்கோ பொது நூலக வளாகத்தில் தான் இருந்தது. இந்த அருங்காட்சியகத்தில் ருமியன்சேவிடமிருந்த பல கலைப் பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது, மேலும் ருமியன் அனைத்து பொருள்களையும் ரஷ்ய மக்களுக்கே நன்கொடையாக வழங்கிவிட்டார். இவை அனைத்தும் புனித பீட்டர்ஸ்பெக் நகரில் இருந்து மாஸ்கோ நகரத்திற்கு மாற்றப்பட்டது. அவர் நன்கொடையாக, தன்னிடமிருந்த அனைத்து புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள், விரிவான நாணயங்களின் தொகுப்பு மற்றும் ஒரு இனம்சார்ந்த பொருட்களின் சேகரிப்பு போன்றவைகள் உள்ளடங்கி இருந்தது. இவை, சுமார் 200 ஓவியங்கள் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட அச்சுப்பதிவுகள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஹெர்மிடேஜ் சேகரிப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாஸ்க்கோவ் இல்லத்தில் (1784 மற்றும் 1787 ஆம் ஆண்டுகளுக்கு இடையே நிறுவப்பட்ட ஒரு அரண்மனை, கிரெம்ளின் மாளிகைக்கு அருகாமையில்).பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இரண்டாவது சர் அலெக்சாண்டர், கிறித்துவின் தோற்றத்தை விளக்கும் ஓவியத்தை, அருங்காட்சியகம் திறப்பதற்காக மக்களின் முன்பாக அலெக்சாண்டர் ஆண்ட்ரேயெவிச் இவனோவ் என்பவரிடம் நன்கொடையாக வழங்கினார்.

மாஸ்கோ நகர குடிமக்கள், ருமியன்சேவின் நன்கொடைகளால் ஈர்க்கப்பட்டு, அவரின் பெயரையே அருங்காட்சியகத்திற்கும் சூட்டினர். மேலும் "நல்ல ஞானத்தை பெறுவதற்காக ருமியன்சேவின் நன்கொடை" என்ற கல்வெட்டையும் பொறித்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுளில், அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக பணம் மற்றும் பொருட்கள் குவிந்ததால், அருங்காட்சியகத்தில் விரைவில் மேற்கத்திய ஐரோப்பிய ஓவியங்கள் தொகுப்பு மற்றும் ஒரு விரிவான பழங்கால சேகரிப்பு மற்றும் சின்னங்களின் பெரிய தொகுப்பு.உருவாக்கப்பட்டது. இந்த தொகுப்புகளின் எண்ணிக்கை கூடியதால் பாஸ்க்கோவ் இல்லத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் அருகிலேயே அருங்காட்சியக விரிவாக்கத்திற்காக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாவது கட்டிடம் உருவாக்கப்பட்டது. இங்கு குறிப்பாக ஓவியங்களின் தொகுப்பு சேகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, மேலும் நன்கொடையாக புத்தகங்கள், கலைப் பொருட்கள் என்று அருங்காட்சியகத்தில் குவியத் தொடங்கியது. அதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. அதனால் அருங்காட்சியகம், புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட புசுக்கின் அருங்காட்சியகம் ருமியன் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. 1925 ஆம் ஆண்டு, ருமியன்சேவ் அருங்காட்சியகத்தை கலைத்து விட முடிவுசெய்யப்பட்டது. மேலும் அங்கிருந்த புத்தகங்கள், கலை பொருட்கள் என அனைத்தையும் நாட்டில் உள்ள பிற அருங்காட்சியகங்களுக்கு மாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக மேற்கத்திய ஐரோப்பிய கலை மற்றும் பாரம்பரியமிக்க பொருட்கள் புசுக்கின் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது. பாஸ்கோவ் இல்லத்தின் (3, மோகோவாயா தெரு) பெயர் ரஷ்ய மாநில நூலகம் பழைய கட்டிடம் என்று மறுபெயரிடப்பட்டது. மோகோவாயா மற்றும் வோஸ்விங்கா தெருவின் மூலையில் இருந்தபழைய மாநில ஆவண காப்பக கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது.

கட்டிடத்தின் முதல் பகுதியை விளாதிமிர் சேசுகோ மற்றும் விளாதிமிர் கெல்ஃப்ரிக் ஆகியோர் வடிவமைத்தனர். முதல் கட்டிடத்தின் கட்டுமானம் 1929 இல் வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு, 1930 இல் தொடங்கப்பட்டது.[4] முதல் கட்டிடம் 1941 ஆண்டில் பெரும்பாலும் முடிந்தது. இந்த வகையில், கட்டிடத்தின் வெளிப்புறத் தோற்றம், சோவியத் அரண்மனையில் இருந்து நவீன் புதுச்செவ்வியல்வாதம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இது 1927 ஆம் ஆண்டு வரைவு வடிவமைப்பில் இருந்து கடினமான நவீன்மயமாக்கப்பட்டுள்ளது [5]. சேசுகா திட்டத்தின் படி, கட்டிடத்தின் இறுதிப் பாகமான 250 இருக்கைகள் கொண்ட ஒரு வாசிப்பு வளாகம் 1945 ஆண்டு முடிவுற்றது. மேலும் கூடுதல் விரிவாக்கம் 1960 ஆண்டு வரை தொடர்ந்தது.[6] 1968 ஆம் ஆண்டில் நூலகக் கட்டிடம் அதன் முழு சேமிப்புத் திறனை அடைந்தது, அதனால் கிம்கிவில் ஒரு புதிய ஆவண வைப்பு கட்டிடம் உருவாக்கப்பட்டது. பிரதான சேமிப்பு பகுதிகளிலிருந்து செய்தித்தாள், விஞ்ஞான படைப்புகள் மற்றும் குறைவான தேவை கொண்ட புத்தகங்களை கிம்கி சேமிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டது. கிம்கி முதல் கட்டிடம் 1975 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.[6]

இந்நூலகம் 1925 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் விளாதிமிர் லெனின் மாநில நூலகம் என்று பெயரிடப்பட்டது. மேலும் இந்தப் பெயர், 1992 ஆண்டில் ரஷ்ய மாநில் நூலகம் என்று அப்போதைய ஜனாதிபது போரிஸ் யெல்சினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Russian State Library". Official library website. பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
  2. http://leninka.ru/index.php?doc=2661
  3. "Russian State Library". பார்க்கப்பட்ட நாள் 2 April 2014.
  4. "History of the Russian State Library (in Russian). 1917–1941, p. 4". Archived from the original on 2008-02-09. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  5. Ikonnikov, A. V. (1984) (in Russian). Architecture of Moscow, 20th Century. [Arkhitektura Moskvy. XX vek]. Moskovsky Rabochy. பக். 98–99. 
  6. 6.0 6.1 "History of the Russian State Library (in Russian). 1945–1992, p. 1". Archived from the original on 2008-02-24. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  7. Stuart, Mary (April 1994). "Creating a National Library for the Workers' State: The Public Library in Petrograd and the Rumiantsev Library under Bolshevik Rule". The Slavonic and East European Review 72 (2): 233–258. https://www.jstor.org/sici?sici=0037-6795(1994)72%3a%3C233%3aSlavonic%20%26%20East%20European%20Review%3E2.0.TX%3b2-2&origin=EBSCO. 

வெளி இணைப்புகள்[தொகு]

Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_மாநில_நூலகம்&oldid=3792810" இலிருந்து மீள்விக்கப்பட்டது