ரஷித் அல்-தின் ஹமாதனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈரானில் உள்ள ரஷித் அல்-தின் ஹமாதனியின் சிலை.

ரஷித் அல்-தின் தபிப் (பாரசீகம்: رشیدالدین طبیب) என்பவர் ஈரானை ஆண்ட இல் கானேடு அரச மரபில் வரலாற்றாசிரியர் மற்றும் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் ரஷித் அல்-தின் ஃபத்லுல்லாஹ் ஹமாதனி (رشیدالدین فضل‌الله همدانی, 1247–1318) என்றும் அழைக்கப்படுகிறார்.[1] இவர் ஹமாதனி என்ற இடத்தை பூர்வீகமாக உடைய பாரசீக யூத குடும்பத்தில் பிறந்தார்.

இவர் தனது முப்பதாம் வயதின் போது இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர் இல்கான் கசனிடம் விசியராக (சக்தி வாய்ந்த ஆலோசகர்) பணியாற்றினார். பின்னர் ஜமி அல்-தவரிக் நூலை எழுதுமாறு கசன் இவரை பணித்தார். இந்நூல் இல்கானேட்டின் காலம் மற்றும் மங்கோலியப் பேரரசின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒற்றை நூல் வளமாக கருதப்படுகிறது.[2] இவர் 1316 ஆம் ஆண்டு வரை தனது விசியர் பதவியில் தொடர்ந்தார்.

இல்கானேட்டின் அரசனான ஒல்ஜைடுவுக்கு விஷம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இவர் 1318 இல் கொல்லப்பட்டார்.[2]

வரலாற்றாளர் மோரிஸ் ரொசபி ரஷித் அல்-தினை "விவாதத்திற்குரிய வகையிலே மங்கோலிய ஆட்சியின்போது பாரசீகர்கத்தில் இருந்த மிகப் புகழ் பெற்ற நபர்" என்று குறிப்பிடுகிறார்.[3] இவர் தொடர்ந்து பல நூல்களை எழுதினார். தப்ரிசு நகரத்தில் ரப்-இ ரஷிதி என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார்.

வாழ்க்கை[தொகு]

ரஷித் அல்-தினின் ஜமி அல்-தவரிக் நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள மங்கோலிய வீரர்கள், 1305-1306.

ரஷித் அல்-தின், ஹமாதன் நகரத்திலுள்ள பாரசீக யூத குடும்பத்தில் பிறந்தார். இது தற்போதைய ஹமாதன் மாகாணத்தில் உள்ளது. இவரது தாத்தா இல்கானேட்டை நிறுவிய ஆட்சியாளரான ஹுலாகு கானின் காலத்தில் அவையில் ஒரு உறுப்பினராக பணியாற்றினார். ரஷித் அல்-தினின் தந்தை அவையில் ஒரு மருந்து தயாரிப்பாளராக பணியாற்றினார். இவர் தனது 30 ஆவது வயதின் போது இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.[4]

ரஷித் ஒரு மருத்துவராக பயிற்சி செய்தார். ஹுலாகுவின் மகனான அபகா கானின் ஆட்சியின் போது இவர் சேவை செய்ய ஆரம்பித்தார். கஸ்வினுக்கு அருகிலுள்ள சுல்தானியேவில், இல்கானேடு அவையில் பெரிய விசியராக இவர் பதவிக்கு உயர்ந்தார். இவர் விசியர் மற்றும் மருத்துவராக இல்கானேடு பேரரசர்கள் கசன் மற்றும் ஒல்ஜைடு ஆகியோரின் கீழ் சேவை செய்தார். அபு சயத் பகதூர் கானின் ஆட்சியின் போது இவர் அரசவை சூழ்ச்சிகளில் மாட்டிக் கொண்டார். அங்கிருந்த அமைச்சர்கள் இவரது 70 வயதின் போது இவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தனர். இவரது மகன், கியாஸ் அல்-தின் இபின் ரஷித் அல்-தின் இவருக்குப் பிறகு சிறிது காலத்திற்கு விசியராக பணியாற்றினார்.

உசாத்துணை[தொகு]

  1. "Rashid ad-Din". Encyclopædia Britannica. 2007. Encyclopædia Britannica Online. Accessed 11 April 2007.
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EI2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Genghis Khan: World Conqueror? Introduction by Morris Rossabi http://www.blackwellpublishing.com/content/BPL_Images/Content_store/Sample_chapter/9780631189497/GK_sample_chap.pdf
  4. George Lane, Genghis Khan and Mongol Rule,Hackett Publishing , 2009 p.121.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஷித்_அல்-தின்_ஹமாதனி&oldid=2814459" இருந்து மீள்விக்கப்பட்டது