ரவுத் நாச்சா
ரவுத் நாச்சா' (Raut Nacha ) என்பது தங்களை கிருட்டிணரின் சந்ததியினர் எனக் கருதும் யாதவர் என்ற சாதி நிகழ்த்தும் ஒரு நடனமாகும். அவர்களைப் பொறுத்தவரை இது கிருட்டிணருக்கு வழிபாட்டின் அடையாளமாக இருக்கிறது. 'தேவ உத்னி ஏகாதசி' நேரத்தில் அவர்கள் இந்த நடனத்தை நிகழ்த்துகிறார்கள். இந்து நாட்காட்டியின்படி சிறுது கால ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு கடவுள் கிருட்டிணரை விழித்தெழச் செய்யும் நேரம் என்று நம்பப்படுகிறது. [1] இந்த நடன வடிவம் சத்தீசுகர் மாநிலத்தில் இருந்து உருவானது. இந்த நடனம் மிகவும் பிரபலமான பகவான் கிருட்டிணரின் மீது கோபிகைப் பெண்கள் நிகழ்த்தும் நடனமாகக் கருதப்படும் “இராச லீலை"யை ஒத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த நடனம் வழக்கமாக தீபாவளிக்கு பிறகு ஒரு வாரம் வரை நிகழ்த்தப்படுகிறது. கூடுதலாக, இது "தீமையை அழித்த" கடவுளின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. [2]
ரவுத் நாச்சாவின் வரலாறு / தோற்றம்[தொகு]
யாதவர்கள் என்பவர்கள் ஒரு பண்டைய பழங்குடியினராவர். இந்து வேதங்களின்படி, விஷ்ணுவின் மறுபிறவி என்று கருதப்படும் பகவான் கிருட்டிணரின் சந்ததியினர் என்று இவர்கள் அறியப்படுகிறார்கள். யாதவ குலத்தின் மன்னரும், கிருட்டிணரின் மாமனுமான கம்சனுக்கும் நடந்த போரில் கிருட்டிணரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காகவே இந்த நடனம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நடன வடிவம் யாதவர் / ரவுத் குலத்தினரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது. ஆனால், சத்தீசுகர் மாநிலத்திற்குள் அதன் புகழ் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக, இந்த நடன வடிவம் இப்போது அனைத்து சமூகத்தினரால் நிகழ்த்தப்படுகிறது.
ரவுத் நாச்சாவில் பயன்படுத்தப்படும் ஆடைகள்[தொகு]
இந்த நடன வடிவத்தில் பயன்படுத்தப்படும் ஆடை அடிப்படையில் மிகவும் “வண்ணமயமானது”. மேலும் நடனக் கலைஞர்கள் தங்கள் இடுப்பில் மணிகள் கட்டிக்கொள்வதும் அடங்கும். கூடுதலாக, குச்சிகள் மற்றும் உலோகக் கவசங்களும் இந்த பழங்குடி நடனத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைகின்றன. ஏனெனில் இது அடிப்படையில் "தீமையை அழிப்பது" என்ற வெற்றியைக் கொண்டாடும் ஒரு "வெற்றி நடனம்" (அதாவது யாதவர்களின் கடவுளான கிருட்டிணர் தீயவனான கம்சனை தோற்கடித்த நிகழ்வை கொண்டாடுதல்).
ரவுத் நாச்சாவில் ஈடுபட்டுள்ள இசை[தொகு]
இந்த வகை நடன வடிவத்தில் சம்பந்தப்பட்ட இசையின் சாராம்சம் முக்கியமாக துளசிதாசர் மற்றும் கபீர் ஆகியவர்களால் எழுதப்பட்ட “தோஹா” என்ற வகையில் அமைந்துள்ளது. (மெட்ரிக் மீட்டரில் இயற்றப்பட்ட கவிதைகளில் ஒரு ரைமிங் இணை) அவை ஒரு நிகழ்ச்சியின் போது ஒரு பாடகரால் பாடப்படுகின்றன. ஒரு "தோஹா" என்ற பாடல் வகை சத்தீசுகர் மாநில கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக உள்ளது. பொதுவாக இது இந்தி கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் பண்டிகை சந்தர்ப்பங்களில் இவ்வகை தோஹாக்கள் பயன்படுத்தப்படுகிறது.
ரவுத் நாச்சாவில் பயிற்சி மற்றும் நடன நுட்பம்[தொகு]
இந்த நடன வடிவத்தை நடனக் கலைஞர்கள் குழுக்களாக நடனமாடுவர்.(அதாவது ஆண் மற்றும் பெண்) குச்சிகள் மற்றும் உலோகக் கவசங்களைப் பயன்படுத்தி நிகழ்த்துவர். இதன் கருப்பொருள் முக்கியமாக கிருட்டிணருக்கும் கம்சனுக்கும் இடையிலான போரைப் பற்றி இருக்கும். இவ்வகை நடனத்திற்கான பயிற்சி மையங்கள் / பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ எங்கும் தனியே ஏதும் அமைந்திருக்கவில்லை. ஏனெனில் இது அடிப்படையில் ஒரு "பழங்குடி" நடன வடிவமாகும். இது பொதுவாக ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. [3]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-02-24 அன்று பரணிடப்பட்டது.
- ↑ [https://danceask.com/raut-nacha-chhattisgarh/]
- ↑ [1]