ரவீஷ் குமார்
ரவீஷ் குமார் | |
---|---|
2017 ராம்நாத் கோயங்கா விருதுடன் ரவீஷ் குமார் | |
பிறப்பு | திசம்பர் 5, 1974 மோதிஹாரி, பீகார், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசபந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் இந்திய செய்தித் தொடர்பியல் கல்விக்கழகம் |
பணி | என்டிடிவியின் பத்திரிகையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | நயனா தாஸ்குப்தா |
உறவினர்கள் | பிரஜேஷ் குமார் பாண்டே(சகோதரர்)ref |
விருதுகள் | ராம்நாத் கோயங்கா விருது 2013 & 2017 ரெட் இன்க் விருது 2016 ரமோன் மக்சேசே விருது 2019 |
வலைத்தளம் | |
www |
ரவீஷ் குமார் (ஆங்கில மொழி: Ravish Kumar Pandey) (பிறப்பு 5 டிசம்பர் 1974) என்பவர் இந்திய தொலைக்காட்சித் தொகுப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக ஆளுமையாவார்[1][2] என்டிடிவி குழுமத்தின் என்டிடிவி இந்தியா என்ற தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராகவுள்ளார்.[3] சமூகம் மற்றும் அரசியல் பிரிவுகளில் கவனம்செலுத்தும் இவர் என்டிடிவியின் இந்தி செய்தித் தொலைக்காட்சியில் பிரைம் டைம், ஹம் லோக் மற்றும் ரவீஷ் கி ரிப்போர்ட் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்.[4][5] பத்திரிக்கைத் துறையில் இவரின் சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து ரமோன் மக்சேசே விருது 2019 இல் வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் ஆறாவது இந்தியர் என்ற பெயரையும் பெறுகிறார்.
இளமைக் காலம்
[தொகு]ரவீஷ் குமார் 1974 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் பீகார் மாநிலத்தின் மோதிஹாரியில் பிறந்தார். பாட்னா லயோலா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேற்படிப்பிற்கு டில்லி வந்து தில்லி பல்கலைக்கழகத்தின் தேஷ்பந்து கல்லூரியில் இளநிலைப் பட்டமும், இந்திய செய்தித் தொடர்பியல் கல்விக்கழகத்தில் இதழியல் முதுநிலைப் பட்டயமும் பெற்றார்.
புத்தகங்கள்
[தொகு]- இஸ்க் மேம் ஸஹர் ஹோனா
- தேக்தே ரஹியே
- ரவீஸ்பந்தீ
- தி பீரி வாய்ஸ்: ஆன் டெமொகிரசி, கல்சர் அண்ட் த நேசன்[6][7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "an open letter by ravish to modi".
- ↑ "Ravish Kumar, NDTV Social". ndtv.com. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2019-08-02.
- ↑ "NDTV - The Company". என்டிடிவி. http://www.ndtv.com/convergence/ndtv/corporatepage/ndtv_india.aspx. பார்த்த நாள்: 28 August 2016.
- ↑ "NDTV.com". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2016.
- ↑ Ravish Ki Report
- ↑ "Book review - "The Free Voice"". The Hindu. 24 May 2018. http://www.thehindu.com/books/books-reviews/the-free-voice-on-democracy-culture-and-the-nation-review-looking-through-glass/article23465517.ece. பார்த்த நாள்: 8 June 2018.
- ↑ "Book preview - The free voice - on democracy, culture and the nation". www.amazon.in. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ray, Prakash (5 April 2018). "Review: Democracy and Debate in the Time of 'IT Cell'". The Wire. https://thewire.in/books/ravish-kumar-book. பார்த்த நாள்: 8 June 2018.