ரவிசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரவிசுப்பிரமணியன் ஒரு தமிழக எழுத்தாளர், கவிஞர், ஆவணப்பட இயக்குநர் ஆவார்.

பன்முகம்[தொகு]

கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் (1983-85) பயின்றவர். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் என்ற நிலையில் அவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 40 நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். சாகித்திய அகாடமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இயக்குனர், படத்தொகுப்பாளர் பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனராகவும், விஜய் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி இயக்குனர் மற்றும் முதுநிலை செய்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக கலை, இலக்கியப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நூல்கள்[தொகு]

ஆவணப்படங்கள்[தொகு]

தொலைக்காட்சி நிறுவனங்களுக்காக 100க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர். இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன், தி.ந.இராமச்சந்திரன் குறித்த ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

கட்டுரைகள்[தொகு]

சிறுகதைகள்[தொகு]

  • அதுவும் தாத்தா சொன்னதுதான் (கல்கி)
  • உப்பிலியும் உருத்திரங்கண்ணனாரும் (வடக்கு வாசல், இலக்கிய இதழ், புதுதில்லி)

மெட்டு அமைத்த கவிதைகள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • சிறந்த நூல் (கவிதை) விருது, (தமிழ்நாடு அரசு, 1991)
  • இலக்கிய விருது (திருப்பூர் தமிழ்ச்சங்கம், 1996)
  • ஆவணப்படத்திற்கான விருது (நியூஜெர்சி தமிழ்ச்சங்கம், 2004)
  • சிற்பி இலக்கிய விருது (2015)[8]
  • தி.க.சி.இயற்றமிழ் விருது (2017)[9]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிசுப்பிரமணியன்&oldid=2290025" இருந்து மீள்விக்கப்பட்டது