ரயில்வே பாரம்பரிய மையம், திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரயில்வே பாரம்பரிய மையம்
A vintage steam locomotive at the entrance of Tiruchirappalli Junction
திருச்சி ரயில் நிலைய வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வின்டேஜ் ஸ்டீம் லொகொமோட்டிவ்
நிறுவப்பட்டது18 பெப்ரவரி 2014; 6 ஆண்டுகள் முன்னர் (2014-02-18)
அமைவிடம்ரயில் கல்யாண மண்டபம் அருகில் (சமுதாயக்கூடம்)
திருச்சிராப்பள்ளி சந்திப்பு,
திருச்சிராப்பள்ளி.
அஞ்சல் குறியீட்டு எண் 620 001
வகைபாரம்பரிய மையம்
இயக்குநர்ரயில்வே பிரிவு மேலாளர்,
திருச்சிராப்பள்ளி ரயில்வே பிரிவு
உரிமையாளர்தென்னக ரயில்வே பிரிவு, சென்னை
Public transit accessமத்திய பேருந்து நிலையம்பேருந்து நிலையம்
திருச்சிராப்பள்ளி சந்திப்பு Mainline rail interchange
அருகிலுள்ள கார் நிறுத்துமிடம்On site


ரயில்வே பாரம்பரிய மையம், திருச்சி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் உள்ள, ரயில் தொடர்பான கண்காட்சிப் பொருள்களுக்கான ஒரு ரயில் அருங்காட்சியகம் - பாரம்பரிய மையம் ஆகும்.

கண்ணோட்டம்[தொகு]

இந்த அருங்காட்சியகமானது அமைக்கப்பட்டது ஆரம்பகால நிதியாக ரூ.1 கோடியைக் (1,40,000 அமெரிக்க டாலர்கள்) கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ரயில் தொடர்பான பழைய கலைப்பொருள்கள் மற்றும் புகைப்படங்கள், அரிய ஆவணங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைக்க அமைக்கப்பட்டது. இவ்வருங்காட்சியகம் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் சுவாரஸ்யமான வரலாற்று கால முன்னேற்றங்களையும் கால வரிசைப்படி வழங்குகிறது. 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் 9,500 சதுர அடிகள் (880 m2) பரப்பளவில் கொண்ட, திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு அருகிலுள்ள ரயில் கல்யாண மண்டபத்தில் (சமுதாயக் கூடம்) தொடங்கியது. பிப்ரவரி 18, 2014 ஆம் நாள் அன்று முறையாக ரூ.1.5 கோடியை (2,20,000 அமெரிக்க டாலர்கள்) இறுதி செலவு மதிப்பீடாகக் கொண்டு திறக்கப்பட்டது.

காட்சிப்பொருள்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகம், முந்தைய தென்னிந்திய ரயில்வேயின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமையும். இதன் உட்புற மற்றும் வெளிப்புறக் காட்சிக் கூடங்களில் பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. உட்புற காட்சிக் கூடத்தில் சில பழைய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் காப்பகங்கள் (அரிய புகைப்படங்கள், வரைபடங்கள், ரயில்வே கையேடுகள் மற்றும் பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நூல்கள்) மற்றும் கலைப்பொருட்கள் (சீனா கண்ணாடியைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடிகாரங்கள், மணிகள், ஊழியர்களின் பேட்ஜ்கள் போன்றவை) காட்சிப்படுத்தப்படும் [1] வெளிப்புற காட்சிக் கூடத்தில் இரண்டு விண்டேஜ் லோகோமோட்டிவ் என்ஜின்கள் மற்றும் ஒரு செயல்பாட்டு நிலையிலான பொம்மை ரயில் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.[2]

உட்புறக் காட்சிக்கூடம்[தொகு]

சுமார் 400 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கலைப்பொருட்களையும், சுமார் 200 புகைப்படங்களையும் காட்சிப்படுத்துவதற்காகவும் பல வகை அளவிலான காட்சிக்கூடங்களை அமைக்கவேண்டியிருந்தது. மிகவும் அது சவால் நிறைந்த பணியாகும். 7 அடி நீளமுள்ள 40 எஃகு மேசைகள் அட்டவணைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான காட்சிப்பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக மத்திய பணிமனை / பொன்மலையில் உருவாக்கப்பட்டு கொணரப்பட்டன. 40 எஃகு மேசைகளில் 15 எஃகு மேசைகள் கண்ணாடிப் பெட்டிகளைக் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டன. இவை சிறிய அளவிலான காட்சிப்பொருள்களைக் காட்சிப்படுத்த உதவும். இரும்பு பொருட்களான மற்ற காட்சிப் பொருள்கள் மேசையில் வைக்கப்பட்டுள்ளன. 7 அடி உயரமுள்ள மரத்திலான ஒன்பது காட்சிப்பெட்டிகள், இரு புறங்களிலும் கண்ணாடிகளைக் கொண்ட வகையில், காட்சிப்பொருளை வைப்பதற்காக அமைக்கப்பட்டன. வரவேற்பு மண்டபம் தவிர மூன்று அரங்குகள் ஒவ்வொன்றிலும் மூன்று வரிசைகளைக் கொண்டு அமைந்துள்ளன.நான்கு அரங்குகளிலும் உள்ள காட்சிக்கூடங்களில் அனைத்து ரயில்வே துறைகளின் புகைப்படங்களும் முறையான வரிசைக்கிரமப்படி உள்ளன. அதாவது தோற்றம் தொடங்கி முதல் களத்தில் உள்ள சமீபத்திய நிலை வரை அவை அமையும். இவ்வகையான அமைப்பு பார்வையாளர்களை, அவற்றின் பின்னால் உள்ள கருத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. தனியாக வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருள்கள் அருகே பார்வையாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக அதன் பெயர், வரலாறு மற்றும் பிற விவரங்கள் பொருத்தமான பலகைகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளன. இதைப் போலவே புகைப்படங்களும்கூட உரிய விவரங்களுடன் எழுதி வைக்கப்பட்டுள்ளன.[3]

வெளிப்புறக் காட்சிக்கூடம்[தொகு]

1930 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டப்பட்ட ஒரு எம்.ஜி. 'இன்ஸ்பெக்ஷன் கேரேஜ்' ஆர்.ஏ 9192 காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பழைய தீயணைப்பு வாகனமும் (சாலை வாகனம்) கட்டிடத்தின் முன் புறத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனமானது 1931 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள டென்னிஸ் ப்ரோஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். முதலில் இது மைசூர் மாநில ரயில்வேக்கு சொந்தமாக இருந்தது. இந்த அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக இது திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆர்.பி.எஸ்.எஃப் பயிற்சி மையத்தால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.[3]

பொழுதுபோக்கு[தொகு]

குழந்தைகள் விளையாடுவதற்காக பொம்மை ரயில்கள், உள்ளூர் உணவகங்கள் உள்ளிட்டவை உள்ளன.[4]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]