ரமேஷ் வைத்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரமேஷ் வைத்யா (Ramesh Vaidhya) பத்திரிகையாளரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும்[1], கவிஞரும், சிறுவர் எழுத்தாளரும், நேரடித் தமிழ் சித்திரக்கதை எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இரமேஷ் வைத்யா தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனந்த விகடன் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் ஜன்னல் என்ற வார இதழின் ஆசிரியராகவும் உள்ளார். தற்போது தினமலர் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பட்டம்’ என்ற மாணவர் இதழ் ஆசிரியராக பணி புரிகிறார்.

திரைப்படப் பாடலாசிரியராக[தொகு]

இராஜு முருகனின் இயக்கிய ஜோக்கர் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய செல்லம்மா என்ற பாடல் பெறும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பத்ரியுடன் பணிபுரிந்திருக்கிறார். தில்லுமுல்லு என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஆடாம ஜெயிச்சோமடா எனும் திரைப்படத்தில் கூடி நிற்கும் கூட்டமெல்லாம் எனும் பாடல் இவர் எழுதியது. பல ஆண்டுகள் முன்பே அஜித், பார்த்திபன் நடித்த நீ வருவாய் என என்ற ராஜகுமாரன் இயக்கிய படத்தில் அதிகாலையில் சேவலை எழுப்பி எனும் இவர் எழுதிய பாடல் மிக பிரபலமானது. தற்போது திரையுலகில் அதிக கவனம் பெற்று வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ramesh Vaidhya - IMDB". பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_வைத்யா&oldid=3539328" இலிருந்து மீள்விக்கப்பட்டது