ரபியுதீன் அகமது (பல் மருத்துவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரபியுதீன் அகமது
பிறப்புதிசம்பர் 24, 1890(1890-12-24)
பர்தன்புரா, கிழக்கு வங்காளம் , பிரிட்டிசு இந்தியா
இறப்பு9 பெப்ரவரி 1965(1965-02-09) (அகவை 74)
தேசியம்இந்தியர்
கல்வி
பணிபல் மருத்துவர்
மருத்துவப் பணிவாழ்வு
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்ம பூஷண்

ரபியுதீன் அகமது (Rafiuddin Ahmed, 24 டிசம்பர் 1890 – 9 பிப்ரவரி 1965) ஒரு இந்திய பல் மருத்துவர், கல்வியாளர் மற்றும் மேற்கு வங்க அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பல் மருத்துவ கல்லூரியான, டாக்டர் ஆர். அகமது பல் கல்லூரி மற்றும் மருத்துவமனையை நிறுவினார். பின்னர் 'கல்கத்தா பல் மருத்துவக் கல்லூரி' என்று இக்கல்லூரி பெயர் மாற்றம்செய்யப்பட்டது. இங்கு இவர் 1950 வரை முதல்வராக இருந்தார்.

ரபியுதீன் அகமது 1925ஆம் ஆண்டில் இந்திய பல் மருத்துவ பத்திரிகையை நிறுவினார். மேலும் 1939இல் வங்க பல் மருத்துவ சட்டத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். 1946ஆம் ஆண்டில், இவர் வங்க பல் மருத்துவ சங்கத்தை நிறுவினார். பின்னர் அது இந்திய பல் மருத்துவ சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்திய அரசு இவருக்கு 1964ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதினை வழங்கியது. இவர் இந்திய பல் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ரபியுதீன் அகமது டிசம்பர் 24, 1890 அன்று, பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளத்தின் பர்தன்பராவில் பிறந்தார். மவ்லவி சபியுதீன் அகமது மற்றும் பைசுன்னிஷாவின் இரண்டாவது குழந்தையான இவருக்கு நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர் தனது ஆரம்பக் கல்வியை டாக்கா மதரசாவிலும், பின்னர் 1908இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

மருத்துவ கல்வி[தொகு]

1909 ஆம் ஆண்டில், இவரது தந்தை இறந்த பிறகு, அகமது முதலில் பம்பாய் (இப்போது மும்பை), பின்னர் இங்கிலாந்து மற்றும் பின்னர் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு இவர் அயோவா பல்கலைக்கழக பல் மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார். 1915இல், தனது பல் (டி.டி.எஸ்) மருத்துவ பட்டம் பெற்றார். 1918 வரை, முதல் உலகப் போரின்போது, மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் உள்ள குழந்தைகளுக்கான ஃபோர்சைத் பல் மருத்துவமனையில் பயிற்சி பெற்றார்.[1][2]

1946 ஆம் ஆண்டில், அவர் வங்க பல் மருத்துவ சங்கத்தை நிறுவினார், பின்னர் அது இந்திய பல் மருத்துவ சங்கம் என மறுபெயரிடப்பட்டது. அவர் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தலைவராக மூன்று முறை பணியாற்றினார். 1949 இல், இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது. அதே ஆண்டில், அவர் தனது கல்லூரியை மேற்கு வங்க அரசாங்கத்திற்கு வழங்கினார் மற்றும் அதற்கு கல்கத்தா பல் மருத்துவ கல்லூரி என்று பெயரிட்டார்.[1][2]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Dr. Rafiuddin Ahmed Founding Father Of Indian Dental Association". www.ida.org.in. 7 May 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Kochhar, P. C. (2000). History of the Army Dental Corps and Military Dentistry. Lancer Publishers. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7062-285-7. https://books.google.com/books?id=62boKgTOK7UC&pg=PA25.