உள்ளடக்கத்துக்குச் செல்

ரன்மோர் மார்ட்டினெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரன்மோர் மார்ட்டினெஸ்
Ranmore Martinesz
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரன்மோர் எத்தல்சன் ஜோன் மார்ட்டினெஸ்
பிறப்பு24 சூன் 1967 (1967-06-24) (அகவை 57)
கொழும்பு, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தரம்
பங்குபந்துவீச்சாளர், நடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1994-1995செபஸ்தியானைட்சு துடுப்பாட்டக் கழகம்
முதல்தர அறிமுகம்16 டிசம்பர் 1994 செபஸ்தியானைட்சு v குருணாகலை இளைஞர் துடுப்பாட்டக் கழகம்
கடைசி முதல்தர10 பெப்ரவரி 1995 செபஸ்தியானைட்சு v காலி துடுப்பாட்டக் கழகம்
நடுவராக
தேர்வு நடுவராக4 (2013–இன்றுவரை)
ஒநாப நடுவராக25 (2010–இன்றுவரை)
முத நடுவராக117 (2000–இன்றுவரை)
பஅ நடுவராக101 (2000–இன்றுவரை)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்தர
ஆட்டங்கள் 4
ஓட்டங்கள் 98
மட்டையாட்ட சராசரி 16.33
100கள்/50கள் 0/1
அதியுயர் ஓட்டம் 66
வீசிய பந்துகள் 408
வீழ்த்தல்கள் 4
பந்துவீச்சு சராசரி 62.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0
மூலம்: CricketArchive, 14 மார்ச் 2014

ரன்மோர் மார்ட்டினெசு (Ranmore Martinesz, பிறப்பு: 24 சூன் 1967, கொழும்பு)) இலங்கைத் துடுப்பாட்ட நடுவரும், முன்னாள் முதல்தரத் துடுப்பாட்ட வீரரும் ஆவர். இவர் செபஸ்தியானைட்சு துடுப்பாட்டக் கழகத்திற்காக நான்கு முதல்தரப் போட்டிகளில் கலந்து கொண்டார்.[1]

துடுப்பாட்டம்[தொகு]

விரைவுப் பந்துவீச்சாளராக இருந்த மார்ட்டினெசு கொழும்பு சென் பீட்டர்சு கல்லூரி அணியில் விளையாடினார். 1985 இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் விளையாடினார். 1987/88 காலப்பகுதியில் பாக்கித்தானுக்கு எதிரான 23 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் சிங்கள விளையாட்டுக் கழகம், நீர்கொழும்பு துடுப்பாட்டக் கழகம், செபஸ்தியானைட்சு விளையாட்டுக் கழக அணிகளில் விளையாடிய பின்னர் 1994 இல் துடுப்பாட்ட விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

நடுவர் பணி[தொகு]

1996 முதல் துடுப்பாட்ட நடுவராகப் பணியாற்றி வரும் இவர் 2000 ஆம் ஆண்டில் துடுப்பாட்ட சிறப்புப் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார்.[2] மார்ட்டினெசு தேர்வு மற்றும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றி வருகிறார். இவர் அபுதாபியில் நடந்த யூரோ ஏசியா கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கும் பாக்கித்தான் அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் நடுவராகக் கலந்து கொண்டார். இவற்றை விட நேபாளத்தில் நடந்த கண்டங்களுக்கிடையேயான போட்டிகளிலும், வங்காளதேச உள்ளூர் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ranmore Martinesz". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2012.
  2. "Ranmore Martinesz". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரன்மோர்_மார்ட்டினெஸ்&oldid=2943546" இலிருந்து மீள்விக்கப்பட்டது