ரந்தீர் பிரசாத் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவல்துறை அதிகாரி
ரந்தீர் பிரசாத் வர்மா
அசோகச் சக்கர விருது
2004 ரந்தீர் பிரசாத் வர்மா அஞ்சல் தலை
1952 – 1991
Allegiance இந்தியா
விருதுகள்அசோகச் சக்கர விருது

ரந்தீர் பிரசாத் வர்மா (Randhir Prasad Verma) ஓர் இந்திய காவல்துறை அதிகாரியாவார். இந்தியாவின் சார்கண்ட்டு மாநிலத்திலுள்ள தன்பாத் நகரத்தில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சியை எதிர்த்து போராடியபோது உயிர்த் தியாகம் செய்தார். வீரதீரச் செயலுக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான அசோகச் சக்ரா விருது மரணத்திற்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்திய அரசாங்கம் 2004 ஆம் ஆண்டில் இவரது நினைவாக ஒரு நினைவு தபால்தலையை வெளியிட்டது.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ரந்தீர் வர்மா சார்க்கண்டில் ஒரு கயசுதா குடும்பத்தில் பிறந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

காவல்துறை அனுபவம்[தொகு]

1991 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 அன்று பாங்க் ஆப் இந்தியாவின் தன்பாத் கிளையில் கொள்ளையடிப்பதற்காக ஏ.கே 47 தானியங்கி துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் கும்பலை தனியொருவராக எதிர்கொண்டார். கடுமையான துப்பாக்கிச் சண்டையின் விளைவாக வர்மா இரண்டு கொள்ளையர்களை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ஆனால் பின்னர் எஞ்சியிருந்த கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவில் துணிச்சலுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த அசோகச் சக்ர விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shaheed Randhir Prasad Verma: यह तो समरभूमि, मुट्ठी भर मिट्टी जिसने चूमी, जीता..." Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரந்தீர்_பிரசாத்_வர்மா&oldid=3149331" இலிருந்து மீள்விக்கப்பட்டது