ரத்னாவளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரத்னாவளி
இயக்கம்பிரஃபுல்லா கோசு
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
கதைமூலக்கதை: அர்சர்
திரைக்கதைபம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
பி. எஸ். ரத்னாபாய்<
பி. எஸ். சரஸ்வதிபாய்
கே. எஸ். அங்கமுத்து
பாடலாசிரியர்பாபநாசம் சிவன்
வெளியீடு1935
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரத்னாவளி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரஃபுல்லா கோசு இயக்கிய இத்திரைப்படத்தை[1] ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் தயாரித்திருந்தார். கல்கத்தாவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[2] இதன் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார்.[3] இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பி. எஸ். ரத்னாபாய், பி. எஸ். சரஸ்வதிபாய் சகோதரிகள் ஆகியோர் நடித்திருந்தனர்.

பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றிய ரத்னாவளி நாடகத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[4]

திரைக்கதை[தொகு]

ஹர்ஷவர்தனர் எழுதிய ரத்னாவளி என்ற காப்பியத்தை அடிப்படையாக வைத்து பம்மல் சம்பந்த முதலியார் இதன் திரைக்கதையை எழுதினார். கௌசாம்பி நாட்டு மன்னனுக்கும் (எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி), இலங்கையின் இளவரசி ரத்னாவளிக்கும் (பி. எஸ். ரத்னாபாய்) ஏற்பட்ட காதல் பற்றியது இத்திரைப்படத்தின் கதை.[5]

பாடல்கள்[தொகு]

பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றிய முதலாவது திரைப்படம் இதுவாகும்.[3]

  • கடலுக்கு உவமை கடலே (பாடியவர்: மகாராஜபுரம் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி)[5]
  • மதலைகள் உருக் கொண்ட (பாடியவர்: பி. எஸ். இரத்தினாபாய்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ratnavali on Moviebuff.com". Moviebuff.com. பார்த்த நாள் 7 சனவரி 2017.
  2. ராண்டார் கை (சனவரி 24, 2002). "The Hindu : Melody and more in every frame". தி இந்து. பார்த்த நாள் 7 சனவரி 2017.
  3. 3.0 3.1 "இது நிஜமா!". குண்டூசி: பக். 57. சூலை 1951. 
  4. "Encyclopedia of Indian Cinema". பார்த்த நாள் 7 சனவரி 2017.
  5. 5.0 5.1 Kadalukku uvamai kadale(vMv)--RATHNAAVALI 1935. 2016-08-24. 2017-01-07 அன்று பார்க்கப்பட்டது – via YouTube.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னாவளி_(திரைப்படம்)&oldid=2240976" இருந்து மீள்விக்கப்பட்டது