ரத்னபிரவா தேவி
ரத்னபிரவா தேவி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1961 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 11 திசம்பர 1909 |
| இறப்பு | 27 ஏப்ரல் 2001 |
| உறவுகள் | காமாக்ய பிரசாத் சிங் தியோ(மகன்) |
ரத்னபிரபா தேவி (Ratnaprava Devi) (11 டிசம்பர் 1909 – 27 ஏப்ரல் 2001) ரத்னபிரபா தேபி எனவும் அழைக்கப்பட்ட இவர் இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் எழுத்தாளருமாவார். இவர் 1957 ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2]
வாழ்க்கை வரலாறு
[தொகு]இவர் மன்னர் சங்கர் பிரதாப் சிங் தியோவின் மனைவியும், சரேய்கலா கர்சுவான் இராச்சியத்தின் இளவரசியுமாவார். தேன்கனலின் தற்போதைய மன்னரான பிரிகேடியர் காமாக்ய பிரசாத் சிங் தியோவின் தாயார் ஆவார். இவரது குடும்பப் பின்னணி ஒடிசாவின் அரச மரபினைச் சேர்ந்தது. [3]
ஒரு சட்டமன்ற உறுப்பினராக, ரத்னபிரவா தேவி தேன்கனல் மற்றும் ஒடிசாவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் பங்கு வகித்தார். இவரது சுயசரிதை, இவரது வாழ்நாள் முழுவதும் சமூக-அரசியல் வரலாற்றையும் அனுபவங்களையும் வெளிக்காட்டுகிறது. ரத்னபிரவா தேவியின் தாக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது; இவர் ஜெகந்நாதரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். தனது மக்களின் நலனுக்காக அயராது உழைத்தார். [4][5][6]
மேதகை
[தொகு]"ராணி ரத்னபிரவா தேவியின் சுயசரிதை" என்ற புத்தகமான தேன்கனலில் இவரது எழுபது ஆண்டுகால நினைவுகள் குறிப்பிடப்படுகிறது. முதலில் 1997 ஆம் ஆண்டில் ஒடியாவில் வெளியிடப்பட்ட இது, இப்போது டாக்டர் தபன் கே. பாண்டா மற்றும் டாக்டர் ஜூலி மிஸ்ரா ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Brother-sister duo in Odisha Assembly for long 15 years | Sambad English" (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-26. Retrieved 2024-07-02.
- ↑ Parida, Subhas Chandra; Nayak, Sasmita (2009). Empowerment of Women in India (in ஆங்கிலம்). Northern Book Centre. ISBN 978-81-7211-239-4.
- ↑ India, a Reference Annual (in ஆங்கிலம்). Research and Reference Division, Ministry of Information and Broadcasting, Government of India. 1968.
- ↑ Assembly, Orissa (India) Legislative (1966). Debates (in ஒடியா).
- ↑ Journal of State Politics and Administration (in ஆங்கிலம்). A. P. Padhi. 1982.
- ↑ Sharma, Dr Dipti (1993). Assamese Women in the Freedom Struggle (in ஆங்கிலம்). Punthi-Pustak. ISBN 978-81-85094-61-8.