ரத்தன் சிங் அஜ்னலா
தோற்றம்
ரத்தன் சிங் அஜ்னலா | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2009 - 2014 | |
| பின்னவர் | ரஞ்சித் சிங் பிரம்மபுரா |
| தொகுதி | கடூர் சாகிப் |
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2004 - 2009 | |
| தொகுதி | தரண் தரண் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 சனவரி 1944 தண்டா, இந்தியா |
| அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) |
| துணைவர் | மரு. அவ்தார் கௌர் |
| பிள்ளைகள் | 2 மகன்கள் |
| வாழிடம் | அமிருதசரசு |
22 செப்டம்பர், 2009 மூலம்: [1] | |
ரத்தன் சிங் அஜ்னலா (Rattan Singh Ajnala) (பிறப்பு 16 ஜனவரி 1944) ஒரு இந்திய அரசியல்வாதியும், பதினைந்தாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பஞ்சாபில் உள்ள கடூர் சாகிப் மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். பதினான்காவது மக்களவையில் பஞ்சாபின் தரண் தரண் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர்.[1]
அஜ்னாலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[2] இவரின் மகன் அமர்பால் சிங் 2012 முதல் அஜ்னாலா தொகுதியின் சட்ட பேரைவை உறுப்பினராக இருந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Profile - Dr. Rattan Singh Ajnala". Retrieved 9 November 2016.
- ↑ "I ndia Elections - Ajnala". Retrieved 9 November 2016.