ரதி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரதி
பிறப்புரதி ஆறுமுகம்
23 செப்டம்பர் 1982 (1982-09-23) (அகவை 38)[1]
பெங்களூர், கருநாடகம், இந்தியா[1]
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002–2010

ரதி (Rathi) என அழைக்கப்படும் ரதி ஆறுமுகம் (Rathi Arumugam, பிறப்பு: 23 செப்டம்பர் 1982) இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ரதி கர்நாடக மாநில, பெங்களூரில் 1982 செப்டம்பர் 23 இல் பிறந்தார். இவரின் பெற்றோர் தமிழை தாய் மொழியாய் கொண்ட ஆறுமுகம், பரணி ஆகியோர் ஆவர். இவருக்கு ஒரு அக்காளும், ஒரு தம்பியும் உள்ளனர். இவர் பெங்களூரில் மாத்ருஸ்ரீ ராம்பாய் அம்பேத்கர் பல்மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது,[2] அங்கிருந்து விலகி சுகி எஸ். மூர்த்தி இயக்கிய கும்மாளம் (2002) படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் பெரும்பாலும் புதுமுகங்களே நடித்தனர். இந்தப் படம் வெற்றி பெறவில்லை. பின்னர் தங்கர் பச்சானின் சொல்ல மறந்த கதை படத்தில் சேரனுடன் நடித்தார். இந்த படம் சுமாராக வெற்றி பெற்றாலும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

அடுத்துவந்த மூன்று படங்களில் எதுவும் பெரிய வெற்றி பெறவில்லை. சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் (2003) படத்தில் ஜெனிலியா விற்கு பின்னணிக் குரல் குரல் கொடுத்தார். பின்னர் சத்யராஜ் உடன் அடிதடி திரைப்படத்தில் உம்மா உம்மம்மா பாடலில் நடனமாடினார். ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வி அடைந்தது.[3] பின்னர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாந்திநிலையம் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rathi Filmography", Jointscene (2006-06-14).
  2. "Screen vs. studies". The Hindu (2003-10-06). பார்த்த நாள் 2013-08-17.
  3. "Reel Talk - 'Kutty' Radhika begins innings". மூல முகவரியிலிருந்து 2009-11-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-08-17.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரதி_(நடிகை)&oldid=2717397" இருந்து மீள்விக்கப்பட்டது