ரஞ்சித் சிங் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாராஜா ரஞ்சித் சிங் அருங்காட்சியகம் (Maharaja Ranjit Singh Museum) , இந்திய பகுதியின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரசு நகரின் வடக்கு பகுதி லாரன்ஸ் சாலையிலுள்ள, 'ராம் பாக்' தோட்டப்பூங்காவில் அமைந்துள்ளது. நான்காம் சீக்கிய குருவான 'குரு ராம் தாசு' எனபவர் பெயரில் அமைந்துள்ள ராம் பாக் பூங்கா, லாகூர் 'ஷாலிமார் பாக்' சார்பில் 1818-ல் அடிக்கல் நாட்டப்பட்டதாக கருதப்படுகிறது. துவக்கத்தில் ராசவம்சத்தினரின் கோடைக்கால மாளிகையாக விளங்கிய இந்த கட்டிடம், மகராஜா ரஞ்சித் சிங் உரிமையில் இருந்து, பின்னர் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.[1]

சேகரிப்புகள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில், பல்வேறு ஆயுதக்கருவிகள், புராதன நாணயச்சேகரிப்புகள் மற்றும் எழுத்துப்பிரதிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பழம்பெரும் பொருட்களில் பெரும்பாலானவை முகலாயர் காலத்தை சேர்ந்தவையாகும்.[2]

காணவேண்டியவை[தொகு]

அமிருதசரசுவின் 'ராம் பாக்' பூங்காவில் உள்ள இந்த காட்சியகத்தில், பஞ்சாப் பகுதியை ஆண்ட அரசர்களின் அரண்மனைகள், அரசவைக்காட்சிகள், ராச வம்சத்தினரின் கூடார வாச காட்சிகள் போன்றவை சித்தரிக்கப்பட்ட தூரிகை வண்ண ஓவியங்களும், உலகப்பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரத்தின் மாதிரி (நகல்) ஒன்றும், மஹாராஜா ரஞ்சித் சிங் பயன்படுத்திய முத்திரை பொதிக்கப்பட்ட பர்வானா (விரல் அணிகலன்) ஒன்றும் இங்குள்ள இதர விசேடமான காட்சிப்பொருட்களாகும். சீக்கிய இனத்தாரின் வரலாறு, மற்றும் பாரம்பரியம் குறித்த ஆழமான தகவல்களை அளிக்கும் இந்த அருங்காட்சியகத்தை, தோட்டப்பூங்காவில் உள்ள ஒரு பிரம்மாண்ட வாசல் அமைப்பை கடந்து சென்றால் இந்த அருங்காட்சியக மாளிகையை அடையலாம்.[3]

நுழைவுத் தகவல்[தொகு]

  • முகவரி: மகாராஜா ரஞ்சித் சிங் மியூசியம், லாரன்சு சாலை, கம்பனி பாக் (ராம் பாக்), பஞ்சாப் மாநிலம் அமிருதசரசு அஞ்சல் குறியீடு: 143001,  இந்தியா
  • அனுமதித் தகவல்: இலவச நுழைவு (கட்டணமில்லா காட்சியகம்), (செவ்வாய்க்கிழமை முதல், ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே).
  • கால அட்டவணை:
பார்வை நாட்கள் பார்வைக் காலம் பார்வைக்கால அளவு
ஞாயிறு காலை:10:00-மாலை:09:00 1 - 2 மணிகள்
திங்கள் அனுமதி இல்லை அனுமதி இல்லை
செவ்வாய் காலை:10:00-மாலை:05:00 1 - 2 மணிகள்
புதன் காலை:10:00-மாலை:05:00 1 - 2 மணிகள்
வியாழன் காலை:10:00-மாலை:05:00 1 - 2 மணிகள்
வெள்ளி காலை:10:00-மாலை:05:00 1 - 2 மணிகள்
சனி காலை:10:00-மாலை:09:00 1 - 2 மணிகள்

[4]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Maharaja Ranjit Singh Museum,Amritsar". www.punjabmuseums.gov.in (ஆங்கிலம்) (@ 2006). பார்த்த நாள் 2016-07-18.
  2. "Maharaja Ranjit Singh Museum". www.holidayiq.com (ஆங்கிலம்) (2005-16.). பார்த்த நாள் 2016-07-18.
  3. "महाराजा रणजीत सिंह म्यूजियम, अमृतसर". hindi.nativeplanet.com (இந்தி) (2016.). பார்த்த நாள் 2016-07-18.
  4. www.trabol.com | Maharaja Ranjit Singh Museum, Amritsar