ரஜ்னி பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஜ்னி பாட்டீல்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
10 சனவரி 2013 – 2 ஏப்ரல் 2018
தொகுதி மகாராட்டிரம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1996–1998
முன்னவர் கேசரிபாய் சிறீசாகர்
பின்வந்தவர் ஜெய்சிங்ராவ் கெயிக்வாட் பாட்டீல்
தொகுதி பீடு, மகாராட்டிரம்
தனிநபர் தகவல்
பிறப்பு 5 திசம்பர் 1958 (1958-12-05) (அகவை 62)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) அசோக் பாட்டீல்
தொழில் அரசியல்வாதி

ரஜ்னி பாட்டீல் (Rajni Patil) 5 டிசம்பர் 1958) இவர் இந்திய தேசிய காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தற்போது இமாச்சலப் பிரதேசத்திற்கான அகில இந்திய காங்கிரசு கமிட்டி பொறுப்பாளராக உள்ளார். [1] இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவையில் மகாராட்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தினார் (இந்தியப் பாராளுமன்றத்தின் மேல்சபை). விலாஸ்ராவ் தேஷ்முக் இறந்த பின்னர் 2013 ல் நடந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4]

மாநிலங்களவையில் இவரது செயல்பாடுகள் இவருக்கு சிறந்த அறிமுக நாடாளுமன்ற விருது பெற்றுத் தந்தது. [5] இவர் 1996 இல் பீடு நகரிலிருந்து மக்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை) தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] [7] 2005 ஆம் ஆண்டில், இவர் மத்திய சமூக நல வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [8]

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் பெண்களின் நிலை குறித்து ஐ.நா ஆணையத்தின் 49 வது அமர்வில் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். [9] இந்திய தேசிய மாணவர் ஒன்றியத்தில் கல்லூரியில் மாணவர் அரசியல் தலைவராக இருந்தார். 1992 இல் ஜில்லா பரிஷத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேர்தல் அரசியலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [10]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜ்னி_பாட்டீல்&oldid=3040652" இருந்து மீள்விக்கப்பட்டது