ரஜினி பக்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற இந்தியா பொருளாதார உச்சி மாநாடு 2011 இன் போது இந்தியாவின் கலாச்சார பொருளாதார அமர்வில் ரஜினி பக்சி

ரஜினி பக்சி (Rajni Bakshi) மும்பையைச் சேர்ந்த சுதந்திர எழுத்தாளர் ஆவார். சமகால இந்தியாவில் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களைப் பற்றி இவர் எழுதுகிறார். அஹிம்சா கான்வர்சேசன் என்பதன் நிறுவனர் மற்றும் கண்காணிப்பாளர் ஆவார். இது அகிம்சையின் சாத்தியங்களை ஆராய்வதற்கான வலைத்தளம் ஆகும்.

இவர் முன்னதாக காந்தி பீஸ் ஃபெல்லோவ் அட் கேட்வே ஹவுஸ் எனும் உலகளாவிய ஒற்றுமைக்கான இந்திய குழுவின்உறுப்பினராக இருந்தார். [1] இவரது கட்டுரைகள் பல ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. [2] இவர் கிங்ஸ்டன், ஜமைக்காவின், இந்திரப்பிரஸ்தா கல்லூரி (டெல்லி), ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் (வாஷிங்டன் டி.சி) மற்றும் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் (ஜெய்ப்பூர்) ஆகிய பள்ளிகளில் பயின்றார்.

2000 ஆம் ஆண்டில் ரஜினி ஹோமி பாபா ஆய்வுதவித் தொகையினைப் பெற்றார். இவரது புத்தகம் பஜார்ஸ், கான்வர்சேசன் அண்ட் ஃபிரீடம் (2009) இரண்டு வோடபோன் குறுக்கெழுத்து புத்தக விருதுகளை வென்றது, ஒன்று "புனைகதை அல்லாத" பிரிவிலும் , மற்றின்று "பிரபலமான விருது" பிரிவிலும் விருதினை வென்றது. [3] [4]

படைப்புகள்[தொகு]

  • தெ லாங் ஹால்: 1982-83 ஆம் ஆண்டின் பாம்பே ஜவுளித் தொழிலாளர் வேலைநிறுத்தம் (1986; கிரேட் பாம்பே டெக்ஸ்டைல் ஸ்ட்ரைக் )
  • பாபு குடி:ஜெர்னீஸ் ஓவர் சுவாமி விவேகானந்தாஸ், லெகசி (1993; சுவாமி விவேகானந்தர் )
  • பாபு குடி: ஜர்னீஸ் இன் ரீடிஸ்கவரி ஆஃப் காந்தி (1998)
  • லெட்ஸ் மேக் இட் ஹேப்பன்:ஆல்டர்நேடிவ் எகனாமிக்ஸ் (2003)
  • பஜார்ஸ், கான்வர்சேசன் அண்ட் ஃபிரீடம் (2009)

சான்றுகள்[தொகு]

  1. "The science of non-violence". தி இந்து. 2013-10-02. http://www.thehindu.com/todays-paper/tp-opinion/the-science-of-nonviolence/article5191397.ece. 
  2. Bazaars, Conversations and Freedom, official website
  3. "Mumbaikar brings home fiction award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 August 2010. Archived from the original on 2012-03-24. https://web.archive.org/web/20120324071910/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-21/mumbai/28295181_1_fiction-ruskin-bond-literature. 
  4. "Rajni Bakshi wins two Crossword Book Awards". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2010-08-21. Archived from the original on 2014-12-16. https://web.archive.org/web/20141216143027/http://www.hindustantimes.com/india-news/mumbai/rajni-bakshi-wins-two-crossword-book-awards/article1-589679.aspx. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜினி_பக்சி&oldid=3315850" இருந்து மீள்விக்கப்பட்டது