ரசினிகாந்த்
ரசினிகாந்த் | |
---|---|
![]() 31 சூலை 2010 | |
இயற் பெயர் | சிவாசி ராவ் கைக்வாட் |
பிறப்பு | திசம்பர் 12, 1950![]() |
நடிப்புக் காலம் | 1975-தற்போது வரை |
துணைவர் | லதா ரசினிகாந்த் |
பிள்ளைகள் | செளந்தர்யா ஐஸ்வர்யா |
ரசினிகாந்த்[1] (ஆங்கிலம்: RajiniKanth) என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950), மராட்டியில்: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[2] இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் துவக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.
2007 ஆம் ஆண்டில் ஷங்கரின் (திரைப்பட இயக்குநர்) இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.[3]
ரசினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார்.
2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது.[4] இந்தியத் திரைப்படத்துறையின் ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.
பொருளடக்கம்
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
பிறப்பு[தொகு]
ரசினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பெங்களூர், மைசூர் (தற்போது கருநாடகம்) இந்தியாவில் பிறந்தார். [5] [6] ராமோசி ராவ் காயக்வாடுக்கும் (கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்), ரமாபாய்க்கும் (கோவை எல்லையில் பிறந்தவர்)[7] நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர். [5]தாய் குடும்பத் தலைவியாக இருந்தார். இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட் ஆகும். மராட்டியப் பேரரசர் சிவாஜி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் மராத்திய மொழியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தார். ரசினிகாந்தின் முன்னோர்கள் மகாராட்டிரம் மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள மாவதி கடெபதாரிலும் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குப்பத்திலும் வாழ்ந்தனர்.[8][9] இவருக்கு சத்ய நாராயண ராவ், நாகேஷ்வர ராவ் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் பாலுபாய் எனும் இளைய சகோதரியும் உள்ளனர்.[10] 1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார். [11] பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.[12]
குடும்பம்[தொகு]
16 பெப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, செளந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார். தற்பொழுது இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது.[13]
திரைப்படத்துறை[தொகு]
திரைப்படங்களில்[தொகு]
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரசினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரசினிகாந்த் நிரூபித்தார். ரசினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரசினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.
ரசினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
ரசிகர்களிடம் வரவேற்பு[தொகு]
ரசினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.[14]
பாபா படம் சர்ச்சை[தொகு]
2002 ஆம் ஆண்டில் வெளியான பாபா படத்தில் ரசினிகாந்த் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. அந்த காட்சியை நீக்கக்கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் ரசினிகாந்த் இந்த காட்சியை நீக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான அன்று திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர், இதனால் பாமகவினருக்கும் ரசினிகாந்த் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்ப்பட்டது. இந்த தாக்குதலில் ரசினிகாந்த் ரசிகர்கள் தாக்கப்பட்டனர்.[15]
இதை மனதில் கொண்டு 2004- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்ய உத்தரவிட்டார் ரசினிகாந்த். ஆனால் அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிலிருந்து ரசினிகாந்த் அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருந்தார்.[16][17]
அரசியல் தொடர்பு[தொகு]
1990களில் ரசினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரசினிகாந்த் 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார்
புத்தகங்கள்[தொகு]
- ரஜினி சகாப்தமா? என்ற தலைப்பில் ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து ஜெ. ராம்கி எழுதிய புத்தகம் 2005ல் வெளியானது
- ரசினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில் இவரது படங்களில் உள்ள 30 முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம்.[18] இப்புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
- பாட்சாவும் நானும் என்னும் நூலில் ரசினியை சந்தித்தது முதல் ரசினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
- ரசினி இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான ரசினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன.
அரசியல் பிரவேசம்[தொகு]
ரசினிகாந்த் 2017 திசம்பர் 31 அன்று, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் காலம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு முடிவெடுத்து சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார்.[19]
நடித்த திரைப்படங்கள்[தொகு]
விருதுகள்[தொகு]
இந்திய நடுவண் அரசின் விருதுகள்[தொகு]
- பத்ம பூஷன் விருது, 2000[20]
- பத்ம விபூசன் விருது, 2016
தமிழக அரசின் விருதுகள்[தொகு]
- 1984 ஆம் ஆண்டு கலைமாமணி விருது
- 1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருது
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | தமிழக அரசு திரைப்பட விருதுகள் |
1978 | முள்ளும் மலரும் | காளி | தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் |
1982 | மூன்று முகம் | அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் |
தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் |
1984 | நல்லவனுக்கு நல்லவன் | மாணிக்கம் | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது |
1994 | முத்து | முத்து, எஜமான் |
தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் |
1999 | படையப்பா | ஆறுபடையப்பன் | தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் |
2005 | சந்திரமுகி | டாக்டர். சரவணன் , கிங் வேட்டையன் |
தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் |
2007 | சிவாஜி | சிவாஜி ஆறுமுகம் | தமிழ் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் பரிந்துரை—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது |
2010 | எந்திரன் | டாக்டர். வசீகரன், சிட்டி |
தமிழ் | பரிந்துரை—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது |
பிலிம்பேர் விருதுகள்[தொகு]
வருடம் | படங்கள் | வகை | பலன் |
---|---|---|---|
1977 | புவனா ஒரு கேள்விக்குறி | சிறந்த திரைப்படம் | வெற்றி |
1978 | முள்ளும் மலரும் | சிறந்த திரைப்படம் | வெற்றி |
1979 | ஆறிலிருந்து அறுபது வரை | சிறந்த திரைப்படம் | வெற்றி |
1982 | எங்கேயோ கேட்ட குரல் | சிறந்த திரைப்படம் | வெற்றி |
1984 | நல்லவனுக்கு நல்லவன் | சிறந்த நடிகர் | வெற்றி |
1985 | ஸ்ரீ ராகவேந்திரா | சிறந்த திரைப்படம் | வெற்றி |
1991 | தளபதி | சிறந்த நடிகர் | வெற்றி |
1992 | அண்ணாமலை | சிறந்த நடிகர் | வெற்றி |
1993 | வள்ளி | சிறந்த கதாசிரியர் | வெற்றி |
1995 | பாட்ஷா, முத்து | சிறந்த நடிகர் | வெற்றி |
ஆனந்த விகடன் விருது[தொகு]
- 2017 ஆம் ஆண்டு கபாலி பட நடிப்புக்காக 'சிறந்த நடிகர்' விருது[21]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் ரசினிகாந்த் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2016
- ஆனந்த விகடனில் 2005 மே-சூன் மாதங்களில் ரசினிகாந்து பற்றி வெளி வந்த தொடர்
- ரசினிகாந்து ரசிகர்கள் நடத்தும் வலைத்தளம்
- ரசினிகாந்து ரசிகர்களின் மற்றோர் வலைத்தளம்
- உடம்புக்கும், மனதுக்கும் ஓய்வு தேவைப்பட்டது… – அமெரிக்க பயணம் பற்றி ரஜினிஉடம்புக்கும், மனதுக்கும் ஓய்வு தேவைப்பட்டது… – அமெரிக்க பயணம் பற்றி ரஜினி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Wishing Rajani a haapy Birthday". Filmcircle.com (12 December 2013). பார்த்த நாள் 12 December 2013.
- ↑ Ethiraj, Gopal (14 December 2009). "Rajini is simple, stylish, spiritual, that explains his uniqueness". ஏசியன் டிரிபியூன். http://www.asiantribune.com/news/2009/12/14/sunday-celebrity-rajini-simple-stylish-spiritual-explains-his-uniqueness. பார்த்த நாள்: 14 December 2009.
- ↑ "SUPERSTAR Rajinikanth! The biggest movie star you've probably never heard of". Slate.com (27 செப்டம்பர் 2010). மூல முகவரியிலிருந்து 30 செப்டம்பர் 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 திசம்பர் 2017.
- ↑ "Padma Awards 2016". Press Information Bureau. பார்த்த நாள் 25 சனவரி 2016.
- ↑ 5.0 5.1 "How Shivaji became Rajinikanth". Rediff.com. மூல முகவரியிலிருந்து 6 October 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 October 2014.
- ↑ Ruma Singh (6 July 2007). "Even more acclaim will come his way". The Times of India. Archived from the original on 16 February 2012. http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore/Even_more_acclaim_will_come_his_way/articleshow/2178985.cms. பார்த்த நாள்: 20 April 2011.
- ↑ ரஜினிகாந்தின் தாய் மற்றும் தந்தையின் சொந்த ஊர் (in ta) ரஜினிகாந்த், https://www.vikatan.com/topics/rajinikanth, பார்த்த நாள்: 2018-04-20
- ↑ "Rajinikanth invited for Saswad literary meeting". Daily News and Analysis. 31 December 2013. Archived from the original on 23 January 2014. http://www.dnaindia.com/pune/report-rajinikanth-invited-for-saswad-literary-meeting-1942995. பார்த்த நாள்: 5 February 2014.
- ↑ "Rajini creates drinking water facility in his parents’ memory" (28 April 2009).
- ↑ "Biographical article about Superstar Rajini Kanth". Tamil Star Inc. மூல முகவரியிலிருந்து 6 October 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 October 2014.
- ↑ S, Anandan (6 January 2013). "Reel to real image, a tome". The Hindu. Archived from the original on 28 June 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/reel-to-real-image-a-tome/article4278597.ece. பார்த்த நாள்: 22 February 2013.
- ↑ "ரசினிகாந்த் வாழ்க்கை வரலாறு".
- ↑ "சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்".
- ↑ Rajinikanth Japanese Fan Club gives gooismile - Japanese Corner - Rajinifans.com, http://rajinifans.com/japanese/gooismile.php, பார்த்த நாள்: 2018-04-16
- ↑ https://tamil.filmibeat.com/news/rajinikanth-baba-movie-clash-pmk.html
- ↑ http://www.dinamani.com/tamilnadu/2018/jan/01/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2836367--1.html
- ↑ http://tamil.asianetnews.com/news/media-planning-to-make-quarrel-between-rajini-fans-and
- ↑ http://www.thehindu.com/books/packing-a-punch/article1121012.ece
- ↑ http://www.puthiyathalaimurai.com/news/politics/38329-ttv-express-his-views-about-rajinikanth-political-entry.html
- ↑ http://web.archive.org/web/20070302144232/http://mha.nic.in/awar2000.htm
- ↑ ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2016 [1]