உள்ளடக்கத்துக்குச் செல்

ரஜனி பண்டித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஜனி பண்டித்
பிறப்பு1962
மகாராட்டிரம், இந்தியா
கல்விஉரூபரல் கல்லூரி
பணிதனியார் புலனாய்வாளர்

ரஜனி பண்டித் (Rajani Pandit, பிறப்பு: 1962) இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் புலனாய்வாளரும் தொழில்முனைவோரும் ஆவார். இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளராகக் கருதப்படும் இவர், 1986ஆம் ஆண்டில் ரஜனி இன்வெஸ்டிகேட்டிவ் பியூரோ என்ற புலனாய்வு நிறுவனத்தைத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டளவில் அந்த நிறுவனம் 30 துப்பறிவாளர்களைப் பணியமர்த்தும் அளவிற்கு இருந்தது.

இவரது நிறுவனம் பெரும்பாலும் திருமணப் பிரச்சினைகள், தம்பதியரிடையேயான சந்தேகங்கள், காணாமல் போனவர்கள், கொலை வழக்குகள், நிறுவன உளவியல் நடவடிக்கைகள், அரசியல் வேட்பாளர்களின் பின்னணி ஆய்வுகள் போன்றவற்றைக் கையாள்கிறது. பண்டித் தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பேசஸசுபிகைண்டு பேசசு , மாயாஜால் என்ற இரண்டு மராத்திய மொழி நூல்களை எழுதியுள்ளார். மேலும்,லேடி ஜேம்சு பாண்ட் என்ற ஆவணப்படத்தின் கருப்பொருளாகவும் விளங்கியுள்ளார்.

2018 பிப்ரவரியில், சட்டவிரோதமாக தொலைபேசி அழைப்புத் தரவுகளை வாங்கி விற்றதாகக் கூறப்பட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் புலனாய்வாளர்களில் பண்டித்தும் ஒருவர். 40 நாட்கள் சிறையில் இருந்த பிறகு பிணையில்விடுவிக்கப்பட்ட இவர், குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

ரஜனி பண்டித் 1962 ஆம் ஆண்டில் மகாராட்டிரம் மாநிலத்தில், மும்பை [1] அல்லது தானே மாவட்டத்தைச் சார்ந்த பால்கர் பகுதியில் பிறந்தார். நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் வளர்ந்த இவருக்கு[2], இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

இவரது தந்தை சாந்தாராம் பண்டித், உள்ளூர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (இந்தியா) பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார்.

சிறுவயதிலிருந்தே ரஜனிக்கு அதிக ஆர்வமும் விசாரணை மனப்பான்மையும் இருந்தது. எட்டு அல்லது ஒன்பது வயதில், தங்கள் குடியிருப்பில் இறந்த பெண் உண்மையில் இறந்தாரா என்பதை அறிய இவரது உடலை நேரில் சென்று பார்த்ததாகக் கூறப்படுகிறது. [3](பக்.370) 11 வயதில், உறவினர் ஒருவர் கொடுத்த பரிசுப் பொருள் போலியானது என்பதைத் தானே கண்டறிந்தார்.[4]

தொழில்வாழ்க்கை

[தொகு]

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அலுவலக எழுத்தராகப் பணியாற்றிய பண்டித், தனது முதல் விசாரணை வழக்கை ஒரு பணியிடத் தோழருக்காக மேற்கொண்டார். இவரது மருமகள் பணம் திருடுவதாகக் கூறப்பட்ட வழக்கை ஆராய்ந்தபோது, உண்மையில் அந்தக் குடும்பத்தின் இளைய மகன்தான் திருடன் என்பதை கண்டுபிடித்தார்.[5]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

[தொகு]
  • பெண்களின் சாதனைகளைப் பாராட்டி வழங்கப்படும் ஹிர்கானி விருதை தூர்தர்ஷன் இவருக்கு வழங்கியுள்ளது.[6]
  • இயக்குநர் தின்கர் ராவ் தயாரித்த லேடி ஜேம்சு பாண்டு என்ற ஆவணப்படத்தின் மையக் கதாபாத்திரமாகவும் இவர் இடம்பெற்றுள்ளார்.[6]
  • 2018 அக்டோபரில், ஹியூமன்சு ஆஃப் பாம்பே தொடரில் இவரைப் பற்றிய பதிவு வெளியாகியது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prasad, Blessy Mathew (10 October 2016). "The under 'cover' life of a private eye". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 6 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190106063726/http://www.newindianexpress.com/education/edex/2016/oct/10/the-under-cover-life-of-a-private-eye-1525989.html.
  2. "Private eye: The woman behind the mask". Times of India. 21 June 2003 இம் மூலத்தில் இருந்து 8 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140108030430/http://timesofindia.indiatimes.com/city/mumbai/Private-eye-The-woman-behind-the-mask/articleshow/34220.cms.
  3. Basu, Srimati (2021). "Detector of "Truths"". In Bjorkman, Lisa (ed.). Bombay Brokers. Duke University Press. pp. 367–377. doi:10.1515/9781478013082-039. ISBN 9781478013082. S2CID 240907469.
  4. Kumar, Ruchi (22 November 2017). "India's first woman private detective is right out of a pulp fiction novel". TRT World. Archived from the original on 2 June 2018. Retrieved 2018-05-31.
  5. Kumar, Ruchi (22 November 2017). "India's first woman private detective is right out of a pulp fiction novel". TRT World. Archived from the original on 2 June 2018. Retrieved 2018-05-31.
  6. 1 2 Ramadurai, Charukesi (16 September 2011). "The real lady detectives of India". The National இம் மூலத்தில் இருந்து 4 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140304100410/http://www.thenational.ae/news/world/south-asia/the-real-lady-detectives-of-india.
  7. "This 'Desi Sherlock' story is inspiring people online". The Indian Express (in ஆங்கிலம்). 2018-10-31. Retrieved 2022-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜனி_பண்டித்&oldid=4560960" இலிருந்து மீள்விக்கப்பட்டது