உள்ளடக்கத்துக்குச் செல்

ரஜனி திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஜனி திவாரி
இராஜாங்க அமைச்சர்,
உத்தரப் பிரதேச அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), 17வது மற்றும் பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2017
முன்னையவர்பாபு கான்
தொகுதிசாகாபாத்
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), 16வது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
பதவியில்
மார்ச் 2012 – மார்ச் 2017
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்மாதவேந்திர பிரதாப் சிங்
தொகுதிசவாய்ச்பூர் சட்டமன்றத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
ஏப்ரல் 2008 – மார்ச் 2012
முன்னையவர்உபேந்திர திவாரியின் மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தல்
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிபில்கிராம்[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூலை 1973 (1973-07-21) (அகவை 53)
பில்கிராம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2016–தற்போது)
பிள்ளைகள்2
முன்னாள் மாணவர்சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம் (இளங்கலை)
தொழில்விவசாயம் மற்றும் வணிகம்

ரஜனி திவாரி (Rajani Tiwari பிறப்பு: 21 சூலை 1973) இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச அரசின் இராஜாங்க அமைச்சருமான பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினருமாவார். இவர் சாகாபாத் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

ரஜனி திவாரி 1973 ஆம் ஆண்டு சூலை 21 அன்று ஹர்தோய் மாவட்டத்திலுள்ள பில்கிராம் நகரில் கிருஷ்ண பிரசாத் அக்னிகோத்ரிக்கு மகளாகப் பிறந்தார்.[3] கார்தோய்யிலுள்ள ஆர்ய கன்னியா பட்டப்படிப்புக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பயின்றார். பின்னர் சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம்த்தில் பட்டம் பெற்றார். தொழில்முறையில் இவர் விவசாயம் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ரஜனி திவாரி, உபேந்திர திவாரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.[3] உபேந்திர திவாரி பில்கிராம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.[5] அவர் 2007ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, பில்கிராம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ரஜனி திவாரி வெற்றி பெற்று 2008 ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

வகித்த பதவிகள்

[தொகு]
வரிசை எண் முதல் வரை பதவி[3]
01 2008 2012 உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
02 2008 2012 உறுப்பினர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலக் குழு
03 2012 2017 உறுப்பினர், 16வது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
04 2012 2017 உறுப்பினர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலக் குழு
05 2017 2022 உறுப்பினர், 17வது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
06 2017 2022 உறுப்பினர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலக் குழு
07 2022 பதவியில் உறுப்பினர், பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Joshi, Mohit (16 April 2008). "BSP wins in Colonelganj, Bilgram Assembly polls | TopNews". topnews.in. https://topnews.in/bsp-wins-colonelganj-bilgram-assembly-polls-236228.
  2. ↑ "Shahabad Uttar Pradesh Election 2022 Final Results LIVE: BJP Candidate RAJNI TIWARI wins from Shahabad , Details Inside" (in en). ABP. 10 March 2022. https://news.abplive.com/elections/shahabad-election-2022-results-live-updates-constituency-vote-counting-winner-loser-tally-who-will-win-uttar-pradesh-assembly-election-2022-latest-news-1518305.
  3. 1 2 3 "Member profile" (PDF). 4 February 2015. Archived from the original (PDF) on 4 February 2015. Retrieved 3 December 2019.
  4. ↑ ADR. "Rajani Tiwari(Bahujan Samaj Party(BSP)):Constituency- SAWAYAZPUR(HARDOI) - Affidavit Information of Candidate".
  5. ↑ Affidavit of 2007 UP assembly elections https://www.myneta.info/up2007/candidate.php?candidate_id=145
  6. ↑ Hasan, M; Ranjan (17 April 2008). "Bypolls swing in favour of ruling BSP, BJP". Hindustan Times. https://www.hindustantimes.com/india/bypolls-swing-in-favour-of-ruling-bsp-bjp/story-O4iKzkya9OB6G3xmiHRzmJ.html. பார்த்த நாள்: 27 April 2019.

]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜனி_திவாரி&oldid=4584544" இலிருந்து மீள்விக்கப்பட்டது