ரசம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரசம் (திரைப்படம்)
இயக்கம்ராஜீவ் நாத்
உதவி இயக்குநர்
இந்திரஜித் ரமேஷ்
தயாரிப்புகுரூப் 10
திரைக்கதை
இசை
பாடல்கள்
ஜோப் குரியன்
பின்னணி இசை
விஸ்வஜித்
நடிப்பு
 • இந்திரஜித் சுகுமாரன்
 • நெடுமிடி வேணு
 • வருணா ஷெட்டி
 • சதீஷ் மேனன்
ஒளிப்பதிவுகிரிஷ் கமல்
படத்தொகுப்புபாபு ரத்னம்
கலையகம்
 • குரூப் டென் என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட்
 • சாயா பிலிம்ஸ்
விநியோகம்மேக்ஸ் லேப் வெளியீடு
வெளியீடு23 சனவரி 2015 (2015-01-23)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ரசம் (Rasam) என்பது 2015 ஆம் ஆண்டின் மலையாள மொழியில் வெளிவந்த இந்திய உணவு, சுவை, உணவகம், உணவு வழங்கும் சேவை ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு திரைப்படமாகும். ராஜீவ் நாத், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் இப்படத்தை இணைந்து எழுதி இயக்கியிருந்தனர், சுதிப் எழுதிய கதைக்கு ராஜீவ்நாத் மற்றும் சுதிப் குமார் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதினர்.[1] நெடுமுடி வேணு, தேவன், வருணா ஷெட்டி ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.[2][3]

இதன் படப்பிடிப்பு 2014 ஜனவரி 8 அன்று தோகாவில் துவங்கியது. பின்னர் தொடர்ந்து தோகா, துபாய், கத்தார் , கொச்சி , ஒற்றப்பாலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2015 ஜனவரி 23 அன்று "ரசம்" வெளியானது [4] ஆனால் விமர்சகர்களை ஈர்க்க முடியவில்லை.[5]

கதை சுருக்கம்[தொகு]

இந்தத் திரைப்படமானது தோகாவில் நடைபெறுகிறது, அங்கு வாழும் சேகர் மேனன் என்ற ஒரு வர்த்தகர் தனது மகள் திருமணத்தில் பாரம்பரிய கேரளாவின் விருந்துக்கு ஏற்பாடு செய்ய நினைக்கிறார். சேகர் மேனனின் நெருங்கிய நண்பரான மோகன்லால் அவரது மகள் ஜானகியின் திருமண வரவேற்பிற்காக வள்ளியோட்டுத் திருமேனி என்ற சமையல் கலைஞரை ஏற்பாடு செய்கிறார். இதற்காக வாசுதேவன், பாலு மற்றும் ஆகியோரின் குழு தோகாவிற்கு செல்கின்றனர்.[6] சூழ்நிலைக் காரணமாக பாலு இப்பணியை தனது தந்தையிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. படத்தின் தலைப்பைப் போலவே உணவு இப்படத்தில் பிரதான இடம் பெற்றது

நடிகர்கள்[தொகு]

 • இந்திரஜித் சுகுமாரன் - பாலா சங்கர்
 • வருணா ஷெட்டி - ஜானகி, மேனனின் மகள்
 • நெடுமுடி வேணு வள்ளியோட்டு திருமேனி
 • மோகன்லால் (கேமியோ)
 • தேவன் - சேகர் மேனன்
 • ஜகதீஷ் -அப்து
 • நந்து - கோவிந்தன் நாயர்
 • மைதிலி - சாகிதா
 • அம்பிகா மோகன் - திருமேனியின் மனைவி
 • ராஜேஷ் ராஜன் - பணியாளார்
 • திலீப் சங்கர்
 • ஆல்பெர்ட் அலெக்ஸ் - ஜோஸ்மோன்
 • குடும்ப டாக்டராக சத்யேஷ் மேனன்
 • நிஹால் பிள்ளை - மனு
 • பிந்து கே மேனன் - மேனன் மனைவி

நடிப்பு[தொகு]

மோகன்லால் இப்படத்தில், அவர் துபாயில் ஒரு முன்னணி தொழிலதிபரின் நண்பராக ஒரு முக்கியப் பாத்திரத்தில் தோன்றினார். துபாயின் திருமண நிகழ்ச்சியில் இந்திரஜித்தின் வழிகாட்டியாக நடித்திருந்தார்.[7] இந்திரஜித் கேரளாவில் இயங்கும் உணவகத்தை இயக்கும் பாலு என்ற ஒரு நம்பூதிரி சமையல்காரராக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். பாலு ஒரு தொழில்நுட்ப அறிவியல் மற்றும் முதுநிலை வணிக நிர்வாக பட்டதாரி ஆவார். பிரபலமான சமையல்காரரான் அவனது தந்தை, தோகாவில் நடைபெறும் ஒரு திருமண விழாவிற்கு சமையல் பணிக்காக செல்லும்போது சூழ்நிலை காரணமாக இவனும் உடன் செல்ல நேர்கிறது.[8]

வருணா ஷெட்டி மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுவாகும்.[9] அவர் துபாய் சார்ந்த வணிகரின் மகள் ஜானகியின் பாத்திரத்தில் நடித்தார். படத்தின் முக்கிய கதை இவரது திருமணத்தைச் சுற்றியே நடக்கிறது. நிகால் பிள்ளை இந்த படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.[10]

படப்பிடிப்பு[தொகு]

படத்தின் படபிடிப்பு 2014 ஜனவரியில் தோகாவில் ஸ்பைஸ் போட் என்ற ஒரு உணவகத்தில் தொடங்கியது, இது இந்திரஜித்தின் தாயான மல்லிகா சுகுமாரனுக்கு சொந்தமான விடுதியாகும். தோகாவிலிருந்து ஜனவரியிலேயே படக் குழுவினர் திரும்பினர். மீதமுள்ள படப்பிடிப்பு ஒற்றப்பாளத்தில் நடைபெற்றது .துபாயில் திருவதிரை நோன்பு சமயத்தில் 300 கலைஞர்களை கொண்டு படமாக்கப்பட்டது.[11] மேலும், இந்த படம் வளைகுடா பிராந்தியங்களைச் சுற்றியும் படமாக்கப்பட்டது.[12] மே மாதம், இந்த திரைப்படம் தோகா, துபாய், கொச்சி , மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தது.[13]

இசை[தொகு]

இத்திரைப்படத்தில் ஜோப் குரியன் இசையமைத்த 3 பாடல்களை கே. எஸ். சித்ரா, காவலம் ஸ்ரீகுமார் மற்றும் ஜோப் குரியன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகள் காவலம் நாராயண பணிக்கர் எழுதியுள்ளார்.[14] ஒரு இசையமைப்பாளராக ஜோப் குரியனுக்கு இது முதல் படமாகும். முன்னர் அவர் கன்னட படத்தின் பின்னணி இசையில் பணிபுரிந்திருந்தார். கே. எஸ். சித்ரா ஒரு பாரம்பரிய திருவாதிரை பாடலை பாடியுள்ளார், ஒரு விருந்து நிகழ்ச்சியில் காவலம் ஸ்ரீகுமார் ஒரு வேடிக்கையான பாடலை பாடியிருந்தார்.[15]

குறிப்புகள்[தொகு]

 1. "Malayalam film ‘Rasam’, shot in Qatar to release soon". 5 January 2015. http://indianexpress.com/article/entertainment/regional/malayalam-film-rasam-shot-in-qatar-to-release-soon/. பார்த்த நாள்: 9 January 2015. 
 2. "Mohanlal Joins The Sets Of Rasam". rediff (14 January 2014). பார்த்த நாள் 2014-01-30.
 3. "Mohanlal Joins The Sets Of Rasam". indiaeveryday (13 January 2014). மூல முகவரியிலிருந்து 2014-10-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-01-30.
 4. "Malayalam film shot in Qatar to release soon". 4 January 2015. https://en-maktoob.news.yahoo.com/malayalam-film-shot-qatar-release-soon-092220767.html. பார்த்த நாள்: 5 January 2015. 
 5. "'Rasam' Review Round Up: Mohanlal-Indrajith Starrer Fails to Impress Critics". 27 January 2015. http://www.ibtimes.co.in/rasam-review-round-mohanlal-indrajith-starrer-fails-impress-critics-621615. 
 6. ஜனவரி 23 முதல் 'ரசாம்'.
 7. "Mohanlal and Indrajith together again". nowrunning.com (29 November 2013). பார்த்த நாள் 10 October 2014.
 8. "Rasam Synopsis". nowrunning.com. பார்த்த நாள் 10 October 2014.
 9. "Varuna Shetty to be the heroine in 'Rasam'". nowrunning.com (10 February 2014). பார்த்த நாள் 10 October 2014.
 10. நான் மோகன்லால் அதிர்ச்சி அடைந்தேன் ஆனால் அவரை மிரட்டவில்லை
 11. "Mohanlal Joins The Sets Of Rasam". filmibeat.com (9 January 2014).
 12. "'Rasam' started rolling". nowrunning.com (9 January 2014).
 13. "'Rasam' shooting completed". nowrunning.com (8 May 2014).
 14. "Rasam (2014) Soundtrack". Musicindiaonline. மூல முகவரியிலிருந்து 2014-05-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-05-09.
 15. "Interview with job Kurian". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/Interview-with-job-Kurian/articleshow/31209059.cms. பார்த்த நாள்: 11 October 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசம்_(திரைப்படம்)&oldid=3226456" இருந்து மீள்விக்கப்பட்டது