ரங்கீத் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரங்கீத் ஆறு
River
நாடு இந்தியா
மாநிலம் சிக்கிம்
உற்பத்தியாகும் இடம் இமயமலை
கழிமுகம் தீஸ்டா ஆறு
தென் சிக்கிம் வழியாகச் செல்லும் ரங்கீத் ஆறு.

ரங்கீத் ஆறு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்திலுள்ள ஆறுகளுள் மிகப் பெரியதாகும்.[1] மேற்கு சிக்கிம் மாவட்டத்திலுள்ள இமயமலையில் இந்த ரங்கீத் ஆறு உற்பத்தியாகிறது. இது சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் மாவட்டத்திற்கு எல்லையாக அமைந்துள்ளது. கோடைக்காலத்தின் தொடக்கத்தில் இமையமலையின் பனி உருகி இந்த ஆறு வழியாகச் செல்கிறது பின்னர் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலங்களில் மழை நீர் இந்த ஆறு வழியாக ஓடுகிறது. ஜோர்த்தங், பெல்லிங் மற்றும் லெஷிப் நகர் வழியாகப் பாய்ந்து திரிவேணி எனும் பெயருடன் தீஸ்டா ஆறுடன் கலக்கிறது.[2][3] இவ்வாறு கலக்கும் இடம் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இநத ஆற்றில் 60 மெகாவாட் திறனுடைய நீர் மின் திட்டம் அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கீத்_ஆறு&oldid=2336713" இருந்து மீள்விக்கப்பட்டது