ரங்கமுரா
Appearance
ரங்கமுரா Rangamura | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
ரங்கமுரா (Rangamura) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள போரோமுரா மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். குகி மக்கள், இராங்கோல் மக்கள், கோலோய் மக்கள், திரிபுரி மக்கள், கைபெங் மற்றும் சில பழங்குடி மக்கள் இக்கிராமத்தில் வாழ்கின்றனர்[1].
தேசிய நெடுஞ்சாலை எண் 44 க்கு அருகில் உள்ள துய்சிந்தரை என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ரங்கமுரா அமைந்துள்ளது.[1] அசாம் துணைராணுவப் படையின் ஒரு குடியிருப்பு ரங்கமுராவில் நிறுவப்படுகிறது.