ரங்கநாயகம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரங்கநாயகம்மா (தெலுங்கு: రంగనాయకమ్మ; பிறப்பு:1939) தெலுங்கு மார்க்சியவாதி, பெண்ணியலாளர், எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.[1] பாலின சமத்துவம் பெண்களின் நலம், உரிமைகள், சாதியச் சிக்கல்கள் ஆகியன பற்றி எழுதியுள்ளார். முப்பல ரங்கநாயகம்மா என்பது இவரது முழுப்பெயர் ஆகும்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

ரங்கநாயகம்மா ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம் பொம்மிடி என்னும் சிற்றூரில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். குடும்பத்தில் வசதிக் குறைவால் மேல் படிப்பை மேற்கொள்ள இயலவில்லை

மண வாழ்க்கை[தொகு]

மரபுத் திருமணம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து கணவருடன் வேறுபாடுகள் ஏற்பட்டதால் ரங்கநாயகம்மா தம் கணவரை விட்டு விலகினார். முப்பல என்ற தம் கணவருடைய ஒட்டுப் பெயரையும் கைவிட்டார். பின்னர் தம் எழுத்தின் மேல் அன்பு கொண்ட பாபுஜி என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ரங்கநாயகம்மாவின் எழுத்துப்பணியிலும் அவருடைய நூல்களை மொழிபெயர்ப்பதிலும் பாபுஜி உதவியாக இருந்தார்.

பணிகள்[தொகு]

  • காரல் மார்க்சின் தாசு காப்பிடல் நூலைப் படித்து ரங்கநாயகம்மா தீவிர மார்க்சிய கருத்தாளர் ஆனார். 1974 ஆம் ஆண்டில் ”இராமாயண விச விருட்சம்” என்ற நூலை மார்க்சிய அடிப்படையில் எழுதினார்.
  • ”மார்க்சு காப்பிடல் ஓர் அறிமுகம்” என மூன்று தொகுதிகள் கொண்ட ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.
  • ”ஜானகி விமுகி” என்ற நூலில் பாலின சமத்துவத்துக்கு மார்க்சியமே உகந்த நெறி என விளக்கினார்.
  • ”பலி பீடம்” என்ற புதினத்துக்கு ஆந்திரப் பிரதேச அரசின் சாகித்திய அகாதமி விருது 1965 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
  • சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்சு அவசியத் தேவை என்ற ரங்கநாயகம்மா எழுதிய நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு வெளிவந்துள்ளது.[2]

உசாத்துணை[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கநாயகம்மா&oldid=3317613" இலிருந்து மீள்விக்கப்பட்டது