உள்ளடக்கத்துக்குச் செல்

ரக்சன் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரக்சன் கோட்டம்
رخشان ڈویژن
رخشان ولایت‎
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரக்சன் கோட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரக்சன் கோட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
தலைமையிடம்காரன் நகரம்
நிறுவிய ஆண்டு17 மே 2017
அரசு
 • வகைகோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்)
பரப்பளவு
 • கோட்டம்98,596 km2 (38,068 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • கோட்டம்10,40,001
 • அடர்த்தி10.55/km2 (27.3/sq mi)
 • நகர்ப்புறம்
1,90,539 (18.32%)
 • நாட்டுப்புறம்
8,49,462 (81.68%)
இனக்குழுக்கள்
 • மக்கள்பலூச்சி மக்கள் , பிராகுயி மக்கள் மற்றும் பழங்குடிகள்
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்
    (36.84%)
  • ஆண்:
    (45.65%)
  • பெண்:
    (27.19%)

ரக்சன் கோட்டம் (Rakhshan Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டம் பலூசிஸ்தானின் மேற்கில் அமைந்துள்ளது.[3][4]இதன் நிர்வாகத் தலைமையிடம் காரன் நகரம் ஆகும். இதன் அரசு நிர்வாகி கோட்ட ஆணையாளர் ஆவார். இக்கோட்டத்தில் 4 மாவட்டங்களும், 18 வருவாய் வட்டங்களும் உள்ளது.

இக்கோட்டத்திலிருந்து சிந்து மாகாணச் சட்டமன்றத்திற்கு 4 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 1 தொகுதியும் கொண்டுள்ளது. இக்கோட்டம் பரப்பளவில் பெரிதாக இருப்பினும், பாலைவனச் சூழலில் அமைந்துள்ளதால், மக்கள் தொகை குறைவாக உள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் வெளிர் மெரூன் நிறத்தில் ரக்சன் கோட்டம்

கோட்ட எல்லைகள்

[தொகு]

ரக்சன் கோட்டத்தின் தெற்கில் மக்ரான் கோட்டம், கிழக்கில் கலாத் கோட்டம், வடக்கில் ஆப்கானித்தான் நாடு மற்றும் மேற்கில் ஈரான் நாடும் எல்லைகளாக உள்ளது.

# மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு

(km2)[5]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km2) (2023)

எழுத்தறிவு % (2023)
1 சாகை மாவட்டம் தல்பந்தின் 44,748 269,192 6.0 33.15%
2 வாசூக் மாவட்டம் வாசூக் 33,093 302,623 9.1 21.58%
3 காரன் மாவட்டம் காரன் நகரம் 14,958 260,352 17.4 41.07%
4 நுஸ்கி மாவட்டம் நுஸ்கி 5,797 207,834 35.9 57.12%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
# வருவாய் வட்டம் பரப்பளவு (km2)[6] மக்கள் தொகை (2023) மக்கள் தொகை அடர்த்தி (ppl/km2)

(2023)

எழுத்தறிவு %

(2023)

மாவட்டம்
1 தல்பந்தின் வட்டம் 7,791 122,918 15.78 சாகை மாவட்டம்
2 நோக்குண்டி வட்டம் 16,092 30,625 1.90
3 தஃப்தன் வட்டம் 9,318 19,259
4 சாகை வட்டம் 3,975 73,482 18.49
5 அமூரி வட்டம்
6 சில்காஜி வட்டம்
7 யாக்மச் வட்டம் 7,572 22,908 3.03
8 காரன் வட்டம் 2,941 104,035 35.37 காரன் மாவட்டம்
9 சர்-காரன் வட்டம் 3,539 86,015 24.30
10 தோகுமூல்க் வட்டம் 6,347 49,803 7.85
11 பாத்கையின் வட்டம் 2,131 20,499 9.62
12 நுஸ்கி வட்டம் 3,731 190,905 51.17 நுஸ்கி மாவட்டம்
13 தாக் வட்டம் 2,066 16,929 8.19
14 பெசிமா வட்டம் 6,014 63,368 10.54 வாசூக் மாவட்டம்
15 மாஷ்கெல் வட்டம் 11,663 67,142 5.76
16 வாசூக் வட்டம் 7,494 55,585 7.42
17 நாக் வட்டம் 4,338 57,467 13.25
18 ஷாஅகோரி வட்டம் 3,584 59,061 16.48

அரசியல்

[தொகு]

இக்கோட்டம் பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 1 தொகுதியும் கொண்டுள்ளது.

# மாவட்டம் பலூசிஸ்தான் சட்டமன்றத் தொகுதிகள் பாகிதான் நாடாளுமன்றத் தொகுதிகள்
1 வாசூக் மாவட்டம் PB-31 வாசூக் NA-260 சாகை-நூஸ்கி-காரன்- வாசூக்
2 சாகை மாவட்டம் PB-32 சாகை
3 காரன் மாவட்டம் PB-33 காரன்
4 நுஸ்கி மாவட்டம் PB-34 நுஸ்கி

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை ஆகும்1,040,001[7] இக்கோட்டத்தில் பலூச்சி மொழி, பிராகுயி மொழிகள் பெரும்பான்மையாக பேசப்படுகிறது. 99% மேலான மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  3. "BALOCHISTAN - Overview" (PDF). Relief Web. Retrieved 2 February 2019.
  4. "New districts". DAWN. 23 October 2018. Retrieved 2 February 2019.
  5. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  6. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  7. "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரக்சன்_கோட்டம்&oldid=4326968" இலிருந்து மீள்விக்கப்பட்டது