ரகீம் யார் கான்
ரகீம் யார் கான் | |
---|---|
நகரம் | |
போங் மசூதி | |
ஆள்கூறுகள்: 28°25′12″N 70°18′0″E / 28.42000°N 70.30000°E | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | ரகீம் யார்கான் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 210.2 km2 (81.2 sq mi) |
ஏற்றம் | 83 m (272 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,19,261 |
• அடர்த்தி | 2,500/km2 (6,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 64200 |
இடக் குறியீடு | 068 |
இணையதளம் | rykhan |
ரகீம் யார் கான் (Rahim Yar Khan), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் தெற்கில் அமைந்த ரகீம் யார் கான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் 9 ஒன்றியக் குழுக்களைக் கொண்டது.[2] இந்நகரம், நாட்டின் தலைநகரமான இஸ்லாமாபாத்திற்கு தென்மேற்கே 789 கிலோமீட்டர் தொலைவிலும்; கராச்சிக்கு வடகிழக்கே 674.8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் அருகில் ரகீம் யார் கான் வான்படை தளம் உள்ளது.
வரலாறு
[தொகு]இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பகவல்பூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக ரகீம் யார் கான் நகரம்[3] இருந்தது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ரகீம் யார் கான் நகரத்தின் மக்கள் தொகை 5,19,261 ஆகும்.
கல்வி
[தொகு]- இராணுவப் பொதுப் பள்ளி & கல்லூரி
- பகவல்பூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் ரகீம் யார் கான் வளாகம்
- கவாஜா பரீத் பொறியியல் & தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- வணிகம் & வணிக மேலாண்மைக்கான தேசியக் கல்லூரி
- சேக் சையத் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை
போக்குவரத்து
[தொகு]
வானூர்தி நிலையம்
[தொகு]ரகீம் யார் கான் நகரத்தில் சேக் சையத் பன்னாட்டு வானூர்தி நிலையம்[4]மற்றும் ரகீம் யார் கான் வான்படை தளம் உள்ளது. 2025 பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கையின் போது ரகீம் யார் கான் வானூர்தி நிலையம் பலத்த சேதமடைந்தது.[5][6][7]
தொடருந்து நிலையம்
[தொகு]
கராச்சி-பெஷாவர் நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதையில் அமைந்த ரகீம் யார் கான் தொடருந்து நிலையம், நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rahim Yar Khan, Pakistan Metro Area Population 1950-2024". macrotrends.net. Retrieved 2024-02-05.
- ↑ "county & Unions in the District of Rahim Yar Khan". National Reconstruction Bureau, Government of Pakistan website. Archived from the original on 2012-02-09. Retrieved 2023-05-16.
- ↑ Rafique, Nayar (2021-01-01). "Education, Political Awareness, and Political Participation: A Case of Rahim Yar Khan District of Pakistan". International Journal of Education and Information Technologies. doi:10.46300/9109.2021.15.39. https://www.academia.edu/121400366/Education_Political_Awareness_and_Political_Participation_A_Case_of_Rahim_Yar_Khan_District_of_Pakistan.
- ↑ "Shaikh Zaid Airport– Rahim Yar Khan, Pakistan".
- ↑ "Rahim Yar Khan’s Sheikh Zayed airport damaged by Indian strike". 11 May 2025. https://www.dawn.com/news/amp/1910184.
- ↑ "India targets Sheikh Zayed International airport in Rahim Yar Khan". 10 May 2025. https://tribune.com.pk/story/2545081/india-targets-sheikh-zayed-international-airport-in-rahim-yar-khan?amp=1#amp_tf=From%20%251%24s&aoh=17470458453967&referrer=https%3A%2F%2Fwww.google.com.
- ↑ Pakistan concedes Indian missile strikes destroyed Rahim Yar Khan airbase; killed Squadron leader, 4 others in Sindh