யோ. திருவள்ளுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோ. திருவள்ளுவர்
பிறப்புசூலை 22
வலைத்தளம்
http://www.thiruvalluvar.in/

யோ. திருவள்ளுவர் உலக விவகாரங்கள் குறித்தும், உரிமைக்காகப் போராடுபவர்கள் குறித்தும் ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்சமயம் தொழில் நிமித்தமாக பெல்யியத்தில் வாழ்கிறார். 20 ஆண்டுகளாக ஈழம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகே உள்ள மணலிக்கரை என்னும் கிராமத்தில் பிறந்தவர்.

எழுத்து[தொகு]

இவரது புலம் பெயர் தொழிலாளர் பற்றிய சோகக்கதைகளைக் கொண்ட "திரை கடலோடியும் துயரம் தேடு" நூல் குறிப்பிடும்படியாக வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.

செயற்பாடுகள்[தொகு]

1987 இல் இருந்து கூடங்குளம் அணு உலைக்கான எதிர்ப்பு, அனைவருக்கும் வேலை உத்தரவாதம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.

வெளி வந்த நூல்கள்[தொகு]

  • திரை கடலோடியும் துயரம் தேடு (ஆழி வெளியீடு)
  • ஈழம், இனப்படுகொலைகளுக்குப் பின்னால்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோ._திருவள்ளுவர்&oldid=2711669" இலிருந்து மீள்விக்கப்பட்டது