யோவான் லாதம்
தோற்றம்
| யோவான் லாதம் | |
|---|---|
| பிறப்பு | 27 சூன் 1740 எல்தம், கென்டு, இங்கிலாந்து |
| இறப்பு | 4 பெப்ரவரி 1837 (அகவை 96) வின்செசுடர், ஆம்ப்சையர், இங்கிலாந்து |
| துறை | பறவையியல் |
| அறியப்படுவது | A General Synopsis of Birds |
| ஆய்வாளர் குறியீடு. (விலங்கியல்) | Latham |
யோவான் லாதம் (John Latham, FRS) (27 சூன் 1740 – 4 பெப்ரவரி 1837) என்ற அறிவியலாளர் அடிப்படையில் ஒரு ஆங்கிலேய மருத்துவர், இயற்கையறிஞர் , எழுத்தாளர் ஆவார். இவர் இரண்டு முக்கிய படைப்புகளை[கு 1]வெளியிட்டுள்ளார். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகளில், இங்கிலாந்தை அடைந்த ஆத்திரேலியப் பறவைகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், அவற்றில் பலவற்றிற்கு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டப் பொறுப்பேற்றார். எடுத்துக்காட்டாக, ஈமியூ, மஞ்சள்கொண்டை கிளி போன்ற மேலும் சில[கு 2] ஆத்திரேலியப் பறவைகளுக்குப் பெயரிட்டுள்ளார். இவரின் ஆத்திரேலியப் பறவையியல் ஆய்வுகளால், இவர் ஆத்திரேலியப் பறவையியலின் தாத்தா ("grandfather" of Australian ornithology) எனப் போற்றப்படுகிறார்.[1] தென்னமரிக்காவின் செந்நீல ஐவண்ணக்கிளி பறவையை முதன்முதலில் விவரித்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ படைப்பு 1) A General Synopsis of Birds - 1781–1801,
படைப்பு 2) A General History of Birds - 1821–1828. - ↑ இவர் ஆய்ந்த மேலும் சில ஆத்திரேலியப் பறவைகள் :wedge-tailed eagle, superb lyrebird, Australian magpie, magpie-lark, white-throated needletail, pheasant coucal.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Latham,, John (1740 - 1837). "Bright Sparcs". asap.unimelb.edu. Retrieved 6 சனவரி 2026.
{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)