யோர்கே மஃபூத்
Jump to navigation
Jump to search
யோர்கே மஃபூத் | |
---|---|
![]() | |
கல்வி நிலையம் | ஜோர்ஜியா பல்கலைக்கழகம் |
யோர்கே மஃபூத் (ஸ்பானியம்: Jorge Majfud) (பிறப்பு 1969) உருகுவையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.
வாழ்க்கை வரலாறு[தொகு]
உருகுவை நாட்டிலுள்ள தக்குவாறிம்போ என்ற ஊரில் பிறந்தார். மொண்டிவிடியோ நகரத்தில் அமைந்திருக்கும் குடியரசுப் பல்கலைக்கழகத்தின் தேசிய நுண்கலை கல்விக்கழகத்தில் 1996-யில் பிணையக் கட்டுமானத்துறையில் பட்டம் பெற்றார். கோஸ்டா ரிக்காவில் அமைந்திருக்கும் ஹிஸ்பானோ அமெரிக்கானா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், உருகுவை தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் கலை மற்றும் கணித பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கின்றார். தனது நாவல்கள், கட்டுரைகளுக்காக உலகம் முழுவதும் பயணித்திருக்கின்றார்.
படைப்புகள்[தொகு]
- மௌனங்களின் தாயகத்தில் என்னவிருக்கிறதோ/மறைந்து போன ஞாபகங்கள் (புதினம், 1996)
- அப்பழுக்கற்ற பேரார்வத்தின் விமர்சனங்கள் (கட்டுரைகள், 1998)
- அமெரிக்காவின் ராணி (புதினம், 2001)[1]
- நான் வாழ்ந்த அந்த நேரத்தில் (கட்டுரைகள், 2004)
- புலப்படாத விமர்சனங்கள் மற்றும் லத்தீன் அமெரிக்காவின் கோட்பாட்டு கருத்தியல்களின் அர்த்தங்கள் (கட்டுரைகள், 2006)[2]
- எங்கள் பாவங்களை எங்களுக்காக மன்னியும் (சிறுகதைகள், 2007)
- நிலா நகரம் (புதினம், 2009)
- நெருக்கடி (புதினம், 2012)[3][4][5][6]
- மனிதப்பொறி (கட்டுரைகள், 2012) [7]
- கிட்சால்கோடலியின் நித்திய வருகை, 2012.
- கதைகள், (ஒலிநூல், 2014)
- லத்தீன் அமெரிக்க அரசியல் சினிமா, (கட்டுரைகள், 2014)
- எமியுனியுட்டிக்கா, (கட்டுரைகள், 2014)
- கடந்து போனவை எப்போதும் மீண்டும் வருகிறது, (சிறுகதைகள், 2014)
குறிப்புகள்[தொகு]
- ↑ "50 Great Hispanic Novels Every Student Should Read", Dr. Bruce Johnson
- ↑ Indigenous writings from the convent : negotiating ethnic autonomy in colonial Mexico, by Mónica Díaz.
- ↑ Jorge Majfud applies his fractal vision to Latino immigrants VOXXI
- ↑ Jorge Majfud recrea el drama de los inmigrantes
- ↑ Jorge Majfud applies his fractal vision to Latino immigrants
- ↑ "Una forma de ser latinoamericana" de Gullermo Roz
- ↑ Sexo Continente, Radio Nacional de España, "Cyborgs, el uruguayo Jorge Majfud nos desnuda".