யோயோ அயிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோயோ அயிரை
போதியா அல்மோர்கே[1][2]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: சிப்ரினிபார்மிசு
குடும்பம்: போதிடே
பேரினம்: போதியா
இனம்: போ. அல்மோர்கே
இருசொற் பெயரீடு
போதியா அல்மோர்கே
கிரே, 1831
வேறு பெயர்கள்

போதியா கிராண்டி கிரே, 1832[4]

யோயோ அயிரை (Yoyo loach), அல்மோரா அயிரை அல்லது பாக்கித்தானி அயிரை (போதியா அல்மோர்கே) என்பது போதிடே என்ற அயிரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நன்னீர் மீன் ஆகும். இது வட இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள கங்கைப் படுகையின் மெதுவாக ஓடும் மற்றும் அமைதியான நீரில் தோன்றியுள்ளது.[1][2] பாக்கித்தானி அயிரை என்ற மாற்றுப் பெயர் இருந்தாலும், உண்மையான போ. அல்மோர்கே பாக்கித்தானில் அறியப்படவில்லை. பாக்கித்தானில் காணப்படும் அயிரைச் சிற்றினம் போ. பர்தி.[1][2]

யோயோ அயிரை 14–16 cm (5.5–6.3 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இதன் இருண்ட மற்றும் வெளிறிய வடிவங்களின் காரணமாக இவ்வாறு பெயரிடப்பட்டது[1] இறுதிப் பொதுவான பெயர், அல்மோரா அயிரை, இந்தியாவின் உத்தரகாண்டில் உள்ள அல்மோராவைக் குறிக்கிறது.[4] போ. அல்மோர்கே எனப் பெயரிடப்பட்ட மாதிரிகள் பொதுவாக மீன் காட்சி வர்த்தகத்தில் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை (அனைத்தும் இல்லாவிட்டாலும்) போ. லோஹாசாட்டாவுடன் நெருங்கிய தொடர்புடையவனாகத் தோன்றுகின்றன. இரண்டு விவரிக்கப்படாத சிற்றினங்கள் போ. சிற்றினம் கோசி மற்றும் போ. சிற்றினம் தீசுடா எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படுகின்றன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 SeriouslyFish: Botia almorhae. Retrieved 15 July 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 Grant, S. (2007). Fishes of the genus Botia Gray, 1831, in the Indian region (Teleostei: Botiidae). Ichthyofile 2: 1-106
  3. Chaudhry, S. (2010). "Botia almorhae". The IUCN Red List of Threatened Species (IUCN) 2010: e.T168483A6500554. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T168483A6500554.en. http://www.iucnredlist.org/details/168483/0. பார்த்த நாள்: 4 January 2018. 
  4. 4.0 4.1 Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
  • Froese, Rainer and Pauly, Daniel, eds. (2014). "Botia almorhae" in FishBase. 09 2014 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோயோ_அயிரை&oldid=3733492" இருந்து மீள்விக்கப்பட்டது