உள்ளடக்கத்துக்குச் செல்

யோன் செலிமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோன் செலிமோ
2024 இல் செலிமோ
தனிநபர் தகவல்
பிறப்பு10 நவம்பர் 1990 (1990-11-10) (அகவை 34)
கென்யா
உயரம்1.71 மீ
விளையாட்டு
நாடுஉருமேனியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)மாரத்தான்

யோன் செலிமோ மெல்லி (Joan Chelimo Melly) (பிறப்பு; நவம்பர் 10,1990) கென்ய- உருமேனிய மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். இவர் நீண்ட தூர சாலை ஓட்டப் போட்டிகளில் போட்டியிடுகிறார்.[1] இவர் 2018 செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் நடந்த அரை மராத்தான் போட்டி மற்றும் பெர்லின் அரை மராத்தான், பாஸ்டன் 10 கி. மீ மற்றும் பாஸ்டன் அரை மராத்தான் போன்ற பல சாலைப் பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

செலிமோ, பள்ளியில் படிக்கும்போதே 1500 மீட்டர் ஓடி, தேசிய வாகைப் போட்டி வரை சென்றார். 2011 ஆம் ஆண்டில் சிறிய சாலை பந்தயங்களில் போட்டியிடத் தொடங்கினார். முக்கியமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு எசுப்பானியா மற்றும் மொரோக்கோ சாலைகளில் ஓடினார். அந்த காலகட்டத்தில், இவர் பல பந்தயங்களை வென்றார். இதில் வாலேன்சியா 10கி.மீ தூரத்தை 32:17 நிமிடங்களிலும்,[2] கௌரிப்காவை தளமாகக் கொண்ட ஒரு மொராக்கோ சங்கமான ஓசிபி ஏற்பாடு செய்த 10 கி. மீ தூரத்தை 31:41 நிமிடங்களிலும் [3] ஓடி தனிப்பட்ட சாதைனையைக் கொண்டுள்ளார்.

செலிமோ தனது 2014 இல் தொடர்ச்சியாக 3 வெற்றிகளுடன் முடித்தார். கார்டிஃப் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் அரை மராத்தான் ஓட்டப் பந்தயத்திலும் மற்றும் வச்சாவ் அரை மராத்தான் போட்டியிலும் வென்றார்.[4]

கருத்தரிப்பு காரணமாக, இவர் 2015 இல் எவ்வித ஓட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. பின்னர், செப்டம்பர் 2016 இல் கெரிச்சோ 10 கி.மீ தூரத்தை ஆறாவது இடத்தைப் பிடித்து போட்டிக்குத் திரும்பினார்.[5]

2017 பெர்லின் அரை மராத்தானில் செலிமோ 1:08:45 என்ற மணித்துளிகளில் வெற்றி பெற்றார்.[6] மே மாதத்தில், லீ புய்-என்-வேல் 15 கி.மீ இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், பின்னர் பாஸ்டன் 10 கி.மீ இல் 31:24 [7] என்ற அளவில் வென்று, செப்டம்பரில் கோபனாவன் அரை மராத்தானில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[8] பெரும்பாலான பந்தயங்களில் முன்னிலை வகித்தார். இது ஆண்டின் ஏழாவது வேகமான நேரமான 1:06:25 இன் புதிய தனிப்பட்ட சிறந்த நேரத்தைக் கொண்டிருந்தது.[9] இவர் அக்டோபரில் பாஸ்டனுக்கு திரும்பி வந்து, பாஸ்டன் அரை மராத்தானில் 1:10:31 என்ற அளவில் கடந்து வெற்றியைப் பெற்று ஆண்டின் இரண்டாவது பாஸ்டன் தடகள சங்க நிகழ்வை வென்றார்.[10]

மே 2021 இல் செலிமோ உருமேனிய குடிமகனாக ஆனார். இவர் 3 மார்ச் 2024 அன்று பாரிஸ் அரை மராத்தான் போட்டியை வென்றார்.[11]

செயல்பாடு

[தொகு]

செலிமோ பாலின அடிப்படையிலான வன்முறையிலிருந்து தப்பியவர். விளையாட்டு வீரர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2021 ஆம் ஆண்டில் இவர் டிராப்ஸ் ஏஞ்சல்ஸ் என்ற கென்ய விளையாட்டு வீரர்களின் சங்கத்தை நிறுவினார். இது நாட்டிலும் வெளிநாட்டிலும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறது. சக ஓட்டப்பந்தய வீரரான உலக சாதனையாளர் ஆக்னஸ் டிராப், அக்டோபர் 2021 இல் ஐடெனில் உள்ள தனது வீட்டில் , அவரது கணவரால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நினைவாக இந்த அமைப்பு பெயரிடப்பட்டது.[12][13] மே 2024 இல் இந்த அமைப்பு இட்டனில் ஒரு மையத்தைத் திறந்தது. இது வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடமாக செயல்படுகிறது.[14]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவருக்கு திருமணமாகி, அரியானா என்ற மகள் உள்ளார்.[15] அவர் ஐட்டனில் சாலை ஓட்டங்களில் பயிற்சி பெற்று வசிக்கிறார்.

கௌரவம்

[தொகு]

டிசம்பர் 2024 இல், பிபிசியின் “உத்வேகமளிக்கும் 100 பெண்கள்” பட்டியலில் யோன் செலிமா மெல்லி சேர்க்கப்பட்டார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kenyencele Joan Chelimo, Stella Ruto și Delvine Meringor au primit cetățenia română. Două dintre ele au baremul pentru JO Tokyo la maraton" [Kenyans Joan Chelimo, Stella Ruto and Delvine Meringor have received Romanian citizenship. Two of them have qualified for the Tokyo Olympics in the marathon.]. Click.ro (in ரோமேனியன்). Retrieved 14 May 2021.
  2. "El Maratón Divina Pastora Valencia vuelve a asombrar al mundo" [The Divina Pastora Valencia Marathon amazes the world again]. carreras.deportevalencia.com (in ஸ்பானிஷ்). Archived from the original on 30 July 2017. Retrieved 21 July 2017.
  3. "Winners of AIMS events in 2013". aims-worldrunning.org. Retrieved 21 July 2017.
  4. "Kongin and Chelimo win Cardiff Half". athleticsweekly.com. Retrieved 21 July 2017.
  5. "Safaricom Kericho Road Race: Cardiff Half Marathon winner Chelimo bounces back". michezoafrika.com. Retrieved 21 July 2017.
  6. "Late-entrant Joan Melly takes surprise victory while fellow-Kenyan Gilbert Masai wins". bmw-berlin-marathon.com. Archived from the original on 2 July 2017. Retrieved 21 July 2017.
  7. "Exploit et record pour Mathew Kimeli". pressreader.com. Retrieved 21 July 2017.
  8. "Chebii and Chelimo Secure Kenyan Sweep at B.A.A. 10K". baa.org. Archived from the original on 7 May 2018. Retrieved 21 July 2017.
  9. "Cheroben sizzles 58:40 world lead at Copenhagen Half Marathon". IAAF.org. Archived from the original on 22 September 2017. Retrieved 18 September 2017.
  10. "Kenyans Sweep 2017 B.A.A. Half Marathon". baa.org. Archived from the original on 12 October 2017. Retrieved 12 October 2017.
  11. "Joan Chelimo MELLY". worldathletics.org. உலக தடகள அமைப்பு. Retrieved 3 March 2024.
  12. "BBC 100 Women 2024: Who is on the list this year?". BBC. 3 December 2024. Retrieved 10 December 2024.
  13. McAlister, Sean (25 November 2023). "Tirop's Angels: How the death of one of the world's most promising athletes began a movement against gender-based violence". Olympic Games. Archived from the original on 16 August 2024. Retrieved 10 December 2024.
  14. Esene, Shalom (7 May 2024). "In Honor of Slain Olympian, Family and Friends Open Center for Gender-Based Violence Survivors in Kenya". Okay Africa. Retrieved 10 December 2024.
  15. "Chebii and Chelimo Secure Kenyan Sweep at B.A.A. 10K". baa.org. Archived from the original on 7 May 2018. Retrieved 21 July 2017.
  16. "BBC 100 Women 2024: Who is on the list this year?". BBC. 3 December 2024. https://www.bbc.com/news/resources/idt-4f79d09b-655a-42f8-82b4-9b2ecebab611. பார்த்த நாள்: 3 December 2024. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோன்_செலிமோ&oldid=4216111" இலிருந்து மீள்விக்கப்பட்டது