உள்ளடக்கத்துக்குச் செல்

யோசப் பொன்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிவணக்கத்துக்குரிய
யோசப் பொன்னையா
Rt. Rev. Joseph Ponniah
மட்டக்களப்பு மறைமாவட்டம்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு உயர் மறைமாவட்டம்
மறைமாவட்டம்மட்டக்களப்பு
ஆட்சி துவக்கம்3 சூலை 2012
ஆட்சி முடிவு19 ஆகத்து 2024
பின்வந்தவர்அதிவண. கலாநிதி அன்டன் ரஞ்சித்
பிற தகவல்கள்
பிறப்பு(1952-10-12)12 அக்டோபர் 1952
தன்னாமுனை, இலங்கை
இறப்புமே 19, 2025(2025-05-19) (அகவை 72)
மட்டக்களப்பு
படித்த இடம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

அதி வணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா (Right Reverend Joseph Ponniah, 12 அக்டோபர் 1952 – 19 மே 2025) இலங்கைத் தமிழ் போதகரும், மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

யோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் பிறந்தார்.[2][3] புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[4][5] அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[4][6][7]

பணி

[தொகு]

யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்கப் பாதிரியாராகப் பணியிலமர்த்தப்பட்டார்.[2][3] இவர் பங்குப் பாதிரியாராக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.[4][7] மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4][5][7] 2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்குப் பாதிரியாராகப் பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார்.[4][7] கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[6] 2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.[2][3] 2012 சூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 2024 ஆகத்து 19 அன்று அகவை மூப்பு காரணமாகத் தனது ஆயர் பதவியில் இருந்து இளைப்பாறினார்.[8][9][10]

இறப்பு

[தொகு]

யோசப் பொன்னையா ஆண்டகை இரண்டு கிழமைகளாக சுகவீனமுற்றிருந்த நிலையில் 2025 மே 19 அன்று தனது 72-ஆவது அகவையில் காலமானார்.[11][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Batticaloa". Pontifical Mission Societies - Sri Lanka. Archived from the original on 2015-02-21. Retrieved 2014-12-29.
  2. 2.0 2.1 2.2 2.3 "Bishop Joseph Ponniah". Catholic Hierarchy.
  3. 3.0 3.1 3.2 3.3 "Bishop Ponniah". Union of Catholic Asian News இம் மூலத்தில் இருந்து 2014-12-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141228185028/http://directory.ucanews.com/bishops/bishop-ponniah/700. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "New Auxillary Bishop appointed for East". தமிழ்நெட். 26 பெப்ரவரி 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24775. 
  5. 5.0 5.1 5.2 Perera, Nimal. I. (21 பெப்ரவரி 2008). "New bishop in Trinco-Batticaloa: "hope" beyond the war". AsiaNews. http://www.asianews.it/news-en/New-bishop-in-Trinco-Batticaloa:-hope-beyond-the-war-11582.html. 
  6. 6.0 6.1 "Rev. Fr. Ponniah Joseph new Auxiliary Bishop, Trinco-Batticaloa Diocese". டெய்லி நியூஸ். 29 மே 2008. http://archives.dailynews.lk/2008/05/29/fea05.asp. 
  7. 7.0 7.1 7.2 7.3 "A new, Tamil diocese on Sri Lanka's eastern seashore". ஏசியாநியூஸ். 25 செப்டம்பர் 2012. http://www.asianews.it/news-en/A-new,-Tamil-diocese-on-Sri-Lanka%27s-eastern-seashore-25914.html. 
  8. Vatican announces leadership change for Batticaloa Diocese, ஆகத்து 20, 2024
  9. Resignation of bishop of Batticaloa, Sri Lanka
  10. Sri Lanka: Batticaloa bishop retires, Radio Veritas Asia
  11. மட்டு - அம்பாறை முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா காலமானார்..!, தமிழ்வின், மே 19, 2025
  12. "First Bishop of Batticaloa Diocese passes away". Sunday Times. 2025-05-20. Archived from the original on 2025-05-20. Retrieved 2025-05-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசப்_பொன்னையா&oldid=4275691" இலிருந்து மீள்விக்கப்பட்டது