யோக முத்திரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோக முத்திரைகள் என்பது இந்திய யோகக் கலையில் ஒரு பாகமாகும். யோக முத்ரா என்று சமஸ்கிருத மொழியில் கூறுகிறார்கள். முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருளாகும். இந்த சொல்லிருந்து தோன்றியது.

இந்த முத்திரை பயிற்சிக்கு கை விரல்களே மூலதனமாகும். இம்முத்திரைகள் பற்றி தன்வந்திரி தன்னுடைய தன்வந்திரி வைத்தியம் 1000 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யோக முத்திரைகள் செய்வதற்கு தூய்மையும், அமைதியும் நிறைந்த இடத்தில் உடலை தளர்த்தி இரண்டு கைகளையும் முழங்கால் மீது தளர்வாக வைத்து யோக முத்திரைகளை பிடிக்க வேண்டுமென தன்வந்திரி குறிப்பிடுகிறார்.

விரல் வேறு பெயர் பூதங்கள்
பெருவிரல் அங்குட்டம் நெருப்பு
சுட்டுவிரல் தர்ச்சினை காற்று
நடுவிரல் மத்திமை ஆகாயம்
மோதிரவிரல் அனாமிகை நிலம்
சுண்டுவிரல் கனுட்டிகை நீர்

யோக முத்திரைகள்[தொகு]

மோகினி முத்திரை, சோபினி முத்திரை, திருவினி முத்திரை, யோனி முத்திரை, அபான முத்திரை, சுவகரண முத்திரை முதலிய ஆறு முத்திரைகளையும் "சித்தியுள்ள முத்திரைகள் ஆறு" என்கிறார் தன்வந்திரி.

  1. மோகினி முத்திரை
  2. சோபினி முத்திரை
  3. திருவினி முத்திரை
  4. யோனி முத்திரை
  5. அபான முத்திரை
  6. சுவகரண முத்திரை


முத்திரை வகைகள்[தொகு]

  1. சின் முத்திரை
  2. அனுசாசன் முத்திரை
  3. கருட முத்திரை
  4. முகுள முத்திரை
  5. சுரபி முத்திரை
  6. சங்கு முத்திரை
  7. குபேர முத்திரை
  8. சுவகரண முத்திரை
  9. யோனி முத்திரை
  10. அபான முத்திரை
  11. மோகினி முத்திரை
  12. சோபினி முத்திரை
  13. ஞான முத்திரை
  14. வாயு முத்திரை
  15. சூரிய முத்திரை
  16. பிராண முத்திரை
  17. பச்சன் முத்திரை
  18. லிங்க முத்திரை
  19. அபான வாயு முத்திரை
  20. வருன முத்திரை
  21. ஹாசினி முத்திரை
  22. பிருதிவி முத்திரை
  23. பூதி முத்திரை
  24. தியானி முத்திரை
  25. வஜ்ஜிர பத்ம முத்திரை


என பலவகையான யோக முத்திரைகள் யோக கலையில் உள்ளன.

இம்முத்திரைகளை தியானத்தின் போது பயன்படுத்தி ஞானம், உடல் பலம் ஆகியவற்றை பெருவதற்காக பயன்படுத்துகின்றார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோக_முத்திரைகள்&oldid=2782457" இலிருந்து மீள்விக்கப்பட்டது